Wednesday, February 25, 2009

டாக்டர்.ரஹ்மான்!

அலிகார்: இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று வரலாற்றுச் சாதனை புரிந்த ஒரே ‘இந்திய’ இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானுக்கு கௌரவ டாக்டர் பட்டம் (டி.லிட்) வழங்கப்படும் என்று அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகம் புதன்கிழமை அறிவித்துள்ளது.

ரஹ்மானின் ஆஸ்கர் வெற்றியை அவருக்கு டாக்டர் பட்டம் வழங்குவதன் மூலம் நாங்கள் கொண்டாட விரும்புகிறோம் என்று அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகச் செய்தியாளர் ராகத் அப்ரார் வெளியிட்டுள்ள செதிக் குறிப்பில் கூறியுள்ளார்.

அடுத்த மாதம் 25 தேதி நடைபெறும் வருடாந்திர பட்டமளிப்பு விழாவில் ரஹ்மானுக்கு இந்த டாக்டர் பட்டம் வழங்கப்படும் என்றும் அந்தச் செய்தி கூறுகிறது.

ரஹ்மான் தவிர, டாடா குழுமங்களின் தலைவர் ரட்டன் டாட்டா, பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட பேராசிரியர் எம். எஸ். சுவாமிநாதன் மற்றும் உருது மொழி எழுத்தாளரும், முன்னாள் சாஹித்ய அகாதமி தலைவருமான பேராசிரியர் கோபிசந்த் நாரங் ஆகியோருக்கும் கெளரவ டாக்டர் பட்டம் வழங்க அலிகார் பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது.

7 comments:

  1. கெட்ட குடியே கெடும். பட்ட காலே படும் அப்டிங்குற மாதிரி விருது கிடச்சவங்களுக்கு திரும்ப திரும்ப விருது...

    ReplyDelete
  2. கெட்ட குடியே கெடும். பட்ட காலே படும் அப்டிங்குற மாதிரி விருது கிடச்சவங்களுக்கு திரும்ப திரும்ப விருது.///

    வாங்க நிலா அம்மா!
    இன்னும் நிறைய விருதுகள் இருக்கு!!

    ReplyDelete
  3. நல்ல விஷயம் கிடைக்கட்டும்

    இனிமேல் இசைபுயல் டாக்டர் ஏ.ஆர்.ரகுமான்... ம்ம் கேட்கவே நல்லாதான் இருக்கு

    ஆமா எனக்கு எப்போ கொடுப்பாங்க? ஹி ஹி டிஸ்கி

    ReplyDelete
  4. நல்ல விஷயம் கிடைக்கட்டும்

    இனிமேல் இசைபுயல் டாக்டர் ஏ.ஆர்.ரகுமான்... ம்ம் கேட்கவே நல்லாதான் இருக்கு

    ஆமா எனக்கு எப்போ கொடுப்பாங்க? ஹி ஹி டிஸ்கி///

    கருத்துரைப்புயல்” சரியா?
    ஜமால் கோபிப்பார்!!!

    ReplyDelete
  5. //thevanmayam கூறியது...
    நல்ல விஷயம் கிடைக்கட்டும்

    இனிமேல் இசைபுயல் டாக்டர் ஏ.ஆர்.ரகுமான்... ம்ம் கேட்கவே நல்லாதான் இருக்கு

    ஆமா எனக்கு எப்போ கொடுப்பாங்க? ஹி ஹி டிஸ்கி///

    கருத்துரைப்புயல்” சரியா?
    ஜமால் கோபிப்பார்!!!
    /

    ஹா இதுக்கூட நல்லயிருக்கே

    அவருக்கு கருத்துரை சூராவளினு கொடுக்கலாம்

    ReplyDelete
  6. கருத்துப்புயல் அபு ந்னு
    இன்னைக்கு பதிவு ஒன்னு போடுவோம்!!

    ReplyDelete
  7. அபு என்னுடைய பின் தொடர்பவர்கள் லிஸ்ட் காணவில்லை!!
    பக்க உறுப்புகளை ஒழுங்கமைத்தேன்.
    இப்போது அது டிஸ்ப்ளே ஆகவில்லை!
    ஆனால் உள்ளே இருக்கிறது!!
    இதை சரி செய்வது எப்படி?

    ReplyDelete