Tuesday, February 24, 2009

அதிர்ச்சி! ஜமால், செய்யது, அபு அப்ஸர் மூவருக்கும் பிடிவாரண்ட்!!!

     

        ழக்கொழிந்த சொற்கள் தொடர் பதிவுக்கு நம்ம

செய்யது கூப்பிட்டார். ஏற்கெனவே நிலாவும்

அம்மாவும்  உங்களுக்குப்பிடித்த நபர் னு ஒரு

தொடர் பதிவுக்கு அழைத்து அதப்பத்தி இப்பத்தான்

போட்டேன்!

      தொடர் பதிவுக்கு நான் அழைத்து டிமிக்கி

கொடுக்கும் (காணாமல் போன சொற்கள் போல

இவர்கள் திடீரென்று காணாமல் போனவர்கள்???)

ஜமால்,

செய்யது,

அபு அப்ஸர்

ஆகியோரை எங்கு கண்டாலும் உடன் தகவல் தரவும்

(எப்படி!!! காலையிலேயே ஆரம்பிச்சாச்சு வேலையை!!).

ஏன் சொல் உபயோகமில்லாமப்போகுதுன்னு ஒரே ஆச்சரியமா இருக்கு!

காரணம் யாராவது சொன்னா நல்லா இருக்கும்!

கீழே உள்ள சொற்கலெல்லாம் கூட உபயோகத்தில் இல்லையாம்!

 

அகன்றில்-ஆண் அன்றில் பறவை

 

அகப்பு-ஆழம்

 

அகளி-மண் ஊறுகாய் ஜாடி

 

அதள்-தோல்

 

இட்டரை-  இரு புறமும் வேலிகள் உடைய குறுகிய பாதை. பெரும்பாலும், ஒரு மாட்டு வண்டி மட்டும் செல்லத்தக்க அகலத்தில் இருக்கும்.

 

அஃகரம்- தாவர இனம். வெள்ளெருக்குச்செடி

 

அகன்மணி-அகலமான இரத்தினம்

 

அக்கணா-தான்றி மரம்

 

அக்காரம்-ருத்திராட்ச கொட்டையால் ஆன மாலை

 

அதர்-வழி

 

அஃகம்-தானியம்

 

அலரி-அரளி

 

அசகம்-ஆடு

 

அகங்கை-உள்ளங்கை

 

அடலை-போர்க்களம்

 

இப்படியே ஏகப்பட்டது இருக்குங்க! எனக்குத்தெரிந்து சில சொல் எங்க ஊரிலேயே காணோம்!

அவை கீழே!

வெஞ்சனம்- தொட்டுக்கொள்ளும் கூட்டு,பொறியல்

பிருமணை-பானைக்குக்கீழ் வைக்கும் ரிங்க் போல உள்ளது!

வாங்குப்பலகை-குளிக்க, சமைக்க அமரும் சிறிய மரப்பலகை

சொளகு,சொலகு-அரிசி புடைக்கும் முறம்

கொட்டான்- பனை ஓலையில் செய்த சின்ன கின்னம் போல்

கடகம்- பெரிய பனை ஒலைப்பெட்டி

வாங்கருவா-தொரட்டி போல் மரத்தின் உயரத்தில் இருக்கும் காயைப்பிடுங்க உதவும் அரிவாள்+ நீண்டகம்பு

குதிரைவல்லி-ஒருவித சிறிய தானியம்-முன்பு அரிசியில் கலந்து வரும்.

பனங்கை-பனைமரம் வெட்டி சீர் செய்த துண்டு! குடிசை போட வாங்குவர்.

செய்-வயல்..

இவற்றில் சில இன்றும் கிராமப்புறங்களில் உண்டு!!

அதே மாதிரி இதுக்கும் தொடர் பதிவு உண்டாம்!!

விதிப்படி குறைந்த பட்சம் 3 பேரைக்கூப்பிட வேண்டுமாம்!

நம்ம கொஞ்சம் அதிகபட்சம்தானே!இதோ நான் அழைப்பவர்கள்-

வேத்தியன் -வேத்தியன் பக்கம்

ஹேமா-வானம் வெளித்த பின்னும்!

நிலாவும் அம்மாவும்-நிலா எழுதும் கடிதாசி!

அன்புமணி-இலக்கியா

இயற்கை-இதயப்பூக்கள்!

மிஸஸ்.டவுட்- மிஸஸ் டவுட்

அருணா-அன்புடன்அருணா!

கவின்-கவின்

 

+

ஜமால்,

செய்யது,

அபு அப்ஸர்

இவுங்க என்ன எழுதுறாங்க பார்ப்போம்!

தலைப்பு என்னன்னு கேக்கிறீங்களா? சும்மா டமாசு!!!! இஃகி!! இஃகி!!இஃகி!!

தேவா.

103 comments:

 1. வந்துட்டேன்...
  பர்ஷ்ட்டு !

  ReplyDelete
 2. ஆஹா....
  திரும்பவுமா ???
  சரி நம்ம தமிழ்.. நாம எழுதாம வேற யாரு எழுதுவாங்க ???
  கலக்குவோம்ல...///

  கலக்குங்க

  ReplyDelete
 3. சொன்னா மாதிரி சரியா 2.30க்கு போட்டுட்டீங்களே????
  ஜமாய்ங்க தல....

  ReplyDelete
 4. ஆஹா....
  திரும்பவுமா ???
  சரி நம்ம தமிழ்.. நாம எழுதாம வேற யாரு எழுதுவாங்க ???
  கலக்குவோம்ல...

  ReplyDelete
 5. தயாரா வச்சிருக்கேன்....
  போட்டுட்டு சொல்றேன்...

  ReplyDelete
 6. எப்பா தலைப்பு வச்சே

  பதிவ ...

  ReplyDelete
 7. அட நமக்கு முன்னாடியேவா!

  ReplyDelete
 8. \\அகன்றில்-ஆண் அன்றில் \\

  ஓஹ்! அப்படியா

  ReplyDelete
 9. வந்துட்டேன்...
  பர்ஷ்ட்டு !//

  வாழ்த்துக்கள் வேத்தியன்

  ReplyDelete
 10. எப்பா தலைப்பு வச்சே

  பதிவ ...///

  உங்க பேரு பிரபலமாகனுமில்ல

  ReplyDelete
 11. எப்போதுமே நாங்க மூனு பேரும் இந்த ப்லாக்ல குத்தவச்சி உட்கார்ந்து இருக்கோம்

  எங்கள காணோம்ன்னு ஒரு பதிவா ...

  ReplyDelete
 12. தயாரா வச்சிருக்கேன்....
  போட்டுட்டு சொல்றேன்.//

  எல்லாம் அட்வான்ஸா

  ReplyDelete
 13. \\thevanmayam கூறியது...

  எப்பா தலைப்பு வச்சே

  பதிவ ...///

  உங்க பேரு பிரபலமாகனுமில்ல\\

  மிக்க நன்றி அண்ணா ...

  ReplyDelete
 14. \\எப்படி!!! காலையிலேயே ஆரம்பிச்சாச்சு வேலையை!!\\

  காலையா
  இது
  மாலை
  வேலை அல்லவோ ...

  ReplyDelete
 15. \\அதர்-வழி\\

  ஆங்கல வார்த்தை போல இருக்கே ...

  ReplyDelete
 16. ஜமால்
  இந்த அதிர்ச்சியை 16 பேர் ரசிக்கிறார்கள்

  ReplyDelete
 17. \\thevanmayam கூறியது...

  ஜமால்
  இந்த அதிர்ச்சியை 16 பேர் ரசிக்கிறார்கள்\\

  ஆமா!

  ReplyDelete
 18. \அதர்-வழி\\

  ஆங்கல வார்த்தை போல இருக்கே .//

  ஆனா தமிழ்தான்..

  ReplyDelete
 19. இதோ வார்த்தைகள் எல்லாம் தயார்...
  பதிவ போட்டுட்டு சொல்றேன் தேவா சார்...

  ReplyDelete
 20. ஏன் இந்த கொலவெறி !!!!!!!!

  ReplyDelete
 21. இதோ வார்த்தைகள் எல்லாம் தயார்...
  பதிவ போட்டுட்டு சொல்றேன் தேவா சார்..//

  ஒக்கே!
  6.00 மணிக்கு போடுங்க
  மக்கள் வருவாங்க

  ReplyDelete
 22. ஏன் இந்த கொலவெறி !!!!!//

  ஒரு அன்புதான்!

  ReplyDelete
 23. \\தலைப்பு என்னன்னு கேக்கிறீங்களா? சும்மா டமாசு!!!! இஃகி!! இஃகி!!இஃகி!!\\

  இப்படி ஒரு தலைப்பா!

  ReplyDelete
 24. thevanmayam கூறியது...

  இதோ வார்த்தைகள் எல்லாம் தயார்...
  பதிவ போட்டுட்டு சொல்றேன் தேவா சார்..//

  ஒக்கே!
  6.00 மணிக்கு போடுங்க
  மக்கள் வருவாங்க//

  ஓக்கே !
  :-)

  ReplyDelete
 25. //(காணாமல் போன சொற்கள் போல

  இவர்கள் திடீரென்று காணாமல் போனவர்கள்???)
  //

  காணாமல் போகும்போது சிவப்பு நிற அரைக்கால் சட்டையும் நீல நிற கோடுபோட்ட சட்டையும் அணிந்திருந்தனர்னு சொல்லாத கொற தான் போல..

  ReplyDelete
 26. \\ஒக்கே!
  6.00 மணிக்கு போடுங்க
  மக்கள் வருவாங்க\\

  ஆமா ஆமா

  ReplyDelete
 27. //இவுங்க என்ன எழுதுறாங்க பார்ப்போம்!//


  எதப்பத்தி ???????

  ReplyDelete
 28. //(எப்படி!!! காலையிலேயே ஆரம்பிச்சாச்சு வேலையை!!).//

  நல்லா கிளப்புனீங்க பீதிய....

  ReplyDelete
 29. \\தலைப்பு என்னன்னு கேக்கிறீங்களா? சும்மா டமாசு!!!! இஃகி!! இஃகி!!இஃகி!!\\

  இப்படி ஒரு தலைப்பா!//

  இதுதான் சரி

  ReplyDelete
 30. //(காணாமல் போன சொற்கள் போல

  இவர்கள் திடீரென்று காணாமல் போனவர்கள்???)
  //

  காணாமல் போகும்போது சிவப்பு நிற அரைக்கால் சட்டையும் நீல நிற கோடுபோட்ட சட்டையும் அணிந்திருந்தனர்னு சொல்லாத கொற தான் போல//

  அட முன்னாடியே சொல்லியிருக்கலாமே

  ReplyDelete
 31. //வெஞ்சனம்- தொட்டுக்கொள்ளும் கூட்டு,பொறியல் //

  இந்த ஒரு சொல் வழக்கு மட்டும் இன்னும் எங்க வீட்டில இருக்குங்க...

  ReplyDelete
 32. /இவுங்க என்ன எழுதுறாங்க பார்ப்போம்!//


  எதப்பத்தி ??????//

  அதுதாங்க ஆமா அதப்பத்திதான்

  ReplyDelete
 33. /வெஞ்சனம்- தொட்டுக்கொள்ளும் கூட்டு,பொறியல் //

  இந்த ஒரு சொல் வழக்கு மட்டும் இன்னும் எங்க வீட்டில இருக்குங்க...//

  இராமநாதபுரம் மாவட்டமா/

  ReplyDelete
 34. //thevanmayam கூறியது...
  /வெஞ்சனம்- தொட்டுக்கொள்ளும் கூட்டு,பொறியல் //

  இந்த ஒரு சொல் வழக்கு மட்டும் இன்னும் எங்க வீட்டில இருக்குங்க...//

  இராமநாதபுரம் மாவட்டமா/
  //

  கரெக்டா கண்டு பிடிச்சிட்டீங்க...

  ராமநாதபுரம் கமுதி பூர்விகம்.

  ReplyDelete
 35. //thevanmayam கூறியது...
  /வெஞ்சனம்- தொட்டுக்கொள்ளும் கூட்டு,பொறியல் //

  இந்த ஒரு சொல் வழக்கு மட்டும் இன்னும் எங்க வீட்டில இருக்குங்க...//

  இராமநாதபுரம் மாவட்டமா/
  //

  கரெக்டா கண்டு பிடிச்சிட்டீங்க...

  ராமநாதபுரம் கமுதி பூர்விகம்.//

  நான் சிவகங்கைதானே

  ReplyDelete
 36. ஆகா! ராகவன் அண்ணே வேறமுன்னாடியே கட்டளையி்ட்டிருந்தாக. இப்ப நீங்களுமா? தப்பிச்சா, அடுத்து எனக்கு ஒரு பதவு போடுவீங்க. சீக்கிரம் வர்றேன், தயாரிப்போடு!

  ReplyDelete
 37. ஆகா! ராகவன் அண்ணே வேறமுன்னாடியே கட்டளையி்ட்டிருந்தாக. இப்ப நீங்களுமா? தப்பிச்சா, அடுத்து எனக்கு ஒரு பதவு போடுவீங்க. சீக்கிரம் வர்றேன், தயாரிப்போடு!//

  வாஙக அன்புமணி சாமி

  ReplyDelete
 38. தலைப்பை பார்ததும் எதோ லொள்ளு பதிவோன்னு நினைச்சுத்தான் வந்தேன். ஆனா எனக்கு விரிச்ச வலைன்னு தெரியாது!

  ReplyDelete
 39. தலைப்பை பார்ததும் எதோ லொள்ளு பதிவோன்னு நினைச்சுத்தான் வந்தேன். ஆனா எனக்கு விரிச்ச வலைன்னு தெரியாது!//

  சரியா விரிப்போம்ல வலைய

  ReplyDelete
 40. தேவா,நான் திகழ்மிளிர் அழைத்து உப்புமடச் சந்தியிலும்(மருவி வரும் அழகு தமிழ்),குழந்தைநிலாவிலும்(கூட்டஞ்சோறு உறவு)போட்டுவிட்டேனே!

  தேவா,நீங்கள் தந்த புதிய சொற்கள் உண்மையில் எனக்கு புதியதாகவே இருக்கு.அறிந்துகொண்டேன்.

  ReplyDelete
 41. படிச்சு முடிச்சாச்சா/

  ReplyDelete
 42. னல்ல டமில் பெஸரது, எலுதுரது கு, நா இர்கும்போது எய்ன் எல்லாறும் வேர ஆல தேடுது. ஒண்ணும் புறியல.

  (பயப்பட்டு விடாதீர்கள். வழக்கமாக தொலைக்காட்சியில் நாம் கேட்கும் தமிழை
  கொஞ்சம் பேசிப்பார்த்தேன்)

  ReplyDelete
 43. னல்ல டமில் பெஸரது, எலுதுரது கு, நா இர்கும்போது எய்ன் எல்லாறும் வேர ஆல தேடுது. ஒண்ணும் புறியல.

  (பயப்பட்டு விடாதீர்கள். வழக்கமாக தொலைக்காட்சியில் நாம் கேட்கும் தமிழை
  கொஞ்சம் பேசிப்பார்த்தேன்)//

  ஏன் நல்லாத்தான் சுத்தமா இருக்கு!

  ReplyDelete
 44. /இவுங்க என்ன எழுதுறாங்க பார்ப்போம்!

  தலைப்பு என்னன்னு கேக்கிறீங்களா? சும்மா டமாசு!!!! இஃகி!! இஃகி!!இஃகி!!//

  ஜமால் இந்த தொடர் பதிவிற்கு வைக்கப் போகும் தலைப்பு
  இதுதான்

  " இப்படி ஒரு தலைப்பா ????????!!!!!!!!"

  :)))))))))))))))))

  இஃகி!! இஃகி!!இஃகி!!

  ReplyDelete
 45. பல சொற்களை மீண்டும் நினைவுப் படுத்தியது தங்களின் இடுகையை

  வாழ்த்துகள் நண்பரே

  அன்புடன்
  திகழ்

  ReplyDelete
 46. /வேத்தியன் -வேத்தியன் பக்கம்

  ஹேமா-வானம் வெளித்த பின்னும்!

  நிலாவும் அம்மாவும்-நிலா எழுதும் கடிதாசி!

  அன்புமணி-இலக்கியா

  இயற்கை-இதயப்பூக்கள்!

  மிஸஸ்.டவுட்- மிஸஸ் டவுட்

  அருணா-அன்புடன்அருணா!

  கவின்-கவின்  +

  ஜமால்,

  செய்யது,

  அபு அப்ஸர் /

  பட்டியல் கம்மி நண்பரே

  ReplyDelete
 47. இந்த பதிவிற்கு எனது தலையங்கம்

  'இன்ஸ்பெக்டர் தேவாவும் மூன்று கைதிகளும்'

  ReplyDelete
 48. அய்யா மருத்துவரய்யா! உங்க பதிவுலே எப்பவுமே சம்மனமிட்டு உக்காந்திருக்கும் எங்களைப்போய் காணவில்லைனு விளம்பரப்படுத்தி???
  என்னா இது சின்னபுள்ளைதனமாவுலே இருக்கு  ஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 49. //ஜமால், செய்யது, அபு அப்ஸர் இவுங்க என்ன எழுதுறாங்க பார்ப்போம்! தலைப்பு என்னன்னு கேக்கிறீங்களா? சும்மா டமாசு!!!! //

  அப்போ போட்டுட வேண்டியதுதான் வெடியை

  ReplyDelete
 50. //இப்படியே ஏகப்பட்டது இருக்குங்க! எனக்குத்தெரிந்து சில சொல் எங்க ஊரிலேயே காணோம்! /

  போலீஸ்லே கம்ப்ளெயின் பண்ணியாச்சா

  ReplyDelete
 51. //(காணாமல் போன சொற்கள் போல இவர்கள் திடீரென்று காணாமல் போனவர்கள்???) ஜமால், செய்யது, அபு அப்ஸர் ஆகியோரை எங்கு கண்டாலும் உடன் தகவல் தரவும் (எப்படி!!! காலையிலேயே ஆரம்பிச்சாச்சு வேலையை!!)./

  ராத்திரி பூரா படுத்திக்கிட்டே யோசிச்சீங்களோ

  ReplyDelete
 52. 25, 50 75, 100 அப்படினு போட்டி போட்டு பின்னூட்டமிட்டுகிட்டு இருக்கோம்
  பிடிவாரண்ட்?????? போட்டாலும் நாங்க உங்க பதிவை விட்டு நகர மாட்டோம்...

  இது எப்படி இருக்கு

  ReplyDelete
 53. இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..

  ஜமால் அப்ஸர் செய்யது மூவருக்கும் எமது சிங்கைப் பதிவர்கள் தகுந்த பாதுகாப்பு வழங்குவார்கள்

  ReplyDelete
 54. //’டொன்’ லீ கூறியது...
  இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..

  ஜமால் அப்ஸர் செய்யது மூவருக்கும் எமது சிங்கைப் பதிவர்கள் தகுந்த பாதுகாப்பு வழங்குவார்கள்
  //

  பார்த்தீங்களா தேவா, இப்போவாவது புரியுதா எங்க பவரை, உலகம் முழுவதும் சப்போர்ட்டுக்கு ஆள் இருக்கு...

  நன்றி டொன்லீ தாங்கள் ஆதரவுகரத்துக்கு
  அப்புறம் பிடி வாரண்ட் போட்டா ஃபிளைட் எரிப்போம், கப்பலை தீயிட்டு கொலுத்துவோம்....

  இப்படி நான் சொல்லலே, எம்மக்கள் சொல்லக்கேள்விப்பட்டேன்

  ReplyDelete
 55. இவுங்க என்ன எழுதுறாங்க பார்ப்போம்!

  தலைப்பு என்னன்னு கேக்கிறீங்களா? சும்மா டமாசு!!!! இஃகி!! இஃகி!!இஃகி!!//

  ஜமால் இந்த தொடர் பதிவிற்கு வைக்கப் போகும் தலைப்பு
  இதுதான்

  " இப்படி ஒரு தலைப்பா ????????!!!!!!!!"

  :)))))))))))))))))

  இஃகி!! இஃகி!!இஃகி!!///

  வாங்க/

  ReplyDelete
 56. பல சொற்களை மீண்டும் நினைவுப் படுத்தியது தங்களின் இடுகையை

  வாழ்த்துகள் நண்பரே

  அன்புடன்
  திகழ்//

  நன்றி
  திகழ்

  ReplyDelete
 57. வேத்தியன் -வேத்தியன் பக்கம்

  ஹேமா-வானம் வெளித்த பின்னும்!

  நிலாவும் அம்மாவும்-நிலா எழுதும் கடிதாசி!

  அன்புமணி-இலக்கியா

  இயற்கை-இதயப்பூக்கள்!

  மிஸஸ்.டவுட்- மிஸஸ் டவுட்

  அருணா-அன்புடன்அருணா!

  கவின்-கவின்  +

  ஜமால்,

  செய்யது,

  அபு அப்ஸர் /

  பட்டியல் கம்மி நண்பரே//

  ஆமாங்க ...உங்க பேர் விட்டுப்போச்சி..
  இஃகி இஃகி

  ReplyDelete
 58. இந்த பதிவிற்கு எனது தலையங்கம்

  'இன்ஸ்பெக்டர் தேவாவும் மூன்று கைதிகளும்'//

  அடடா மிஸ் பண்ணீட்டனே!

  ReplyDelete
 59. /ஜமால், செய்யது, அபு அப்ஸர் இவுங்க என்ன எழுதுறாங்க பார்ப்போம்! தலைப்பு என்னன்னு கேக்கிறீங்களா? சும்மா டமாசு!!!! //

  அப்போ போட்டுட வேண்டியதுதான் வெடியை//

  சும்மா ரெண்டை பத்தவச்சு போடுங்கப்பு!

  ReplyDelete
 60. //(காணாமல் போன சொற்கள் போல இவர்கள் திடீரென்று காணாமல் போனவர்கள்???) ஜமால், செய்யது, அபு அப்ஸர் ஆகியோரை எங்கு கண்டாலும் உடன் தகவல் தரவும் (எப்படி!!! காலையிலேயே ஆரம்பிச்சாச்சு வேலையை!!)./

  ராத்திரி பூரா படுத்திக்கிட்டே யோசிச்சீங்களோ//

  ரொம்பப் பொருத்தம்!

  ReplyDelete
 61. இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..

  ஜமால் அப்ஸர் செய்யது மூவருக்கும் எமது சிங்கைப் பதிவர்கள் தகுந்த பாதுகாப்பு வழங்குவார்கள்//

  நீங்க வ்நதிட்டீயளா!

  ReplyDelete
 62. //’டொன்’ லீ கூறியது...
  இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..

  ஜமால் அப்ஸர் செய்யது மூவருக்கும் எமது சிங்கைப் பதிவர்கள் தகுந்த பாதுகாப்பு வழங்குவார்கள்
  //

  பார்த்தீங்களா தேவா, இப்போவாவது புரியுதா எங்க பவரை, உலகம் முழுவதும் சப்போர்ட்டுக்கு ஆள் இருக்கு...

  நன்றி டொன்லீ தாங்கள் ஆதரவுகரத்துக்கு
  அப்புறம் பிடி வாரண்ட் போட்டா ஃபிளைட் எரிப்போம், கப்பலை தீயிட்டு கொலுத்துவோம்....

  இப்படி நான் சொல்லலே, எம்மக்கள் சொல்லக்கேள்விப்பட்டேன்//

  இது என்னப்பா பீதியக் கெள்ப்பிறீய!!

  ReplyDelete
 63. தேவா சார் அழகு....நல்ல முயற்சி....உண்மையில் பல வார்த்தைகள் எனக்கு தெரியாது இருந்தன......ஹி ஹி ஹி அப்புறம் புதிதாக வழக்கில் உள்ள வார்த்தைகளையும் கூறவும்...ம்ம்ம் டமாரு,டரியல் இப்படி.....

  ReplyDelete
 64. தேவா சார் அழகு....நல்ல முயற்சி....உண்மையில் பல வார்த்தைகள் எனக்கு தெரியாது இருந்தன......ஹி ஹி ஹி அப்புறம் புதிதாக வழக்கில் உள்ள வார்த்தைகளையும் கூறவும்...ம்ம்ம் டமாரு,டரியல் இப்படி.//

  நல்லாயிருக்கே இதுவும்!!

  ReplyDelete
 65. பதிவு போட்டாச்சு...
  வந்து ஒரு லுக்கை விட்டுட்டு போங்க...

  ReplyDelete
 66. பதிவு போட்டாச்சு...
  வந்து ஒரு லுக்கை விட்டுட்டு போங்க...//
  இதோ வ்ருகிறேன்!!

  ReplyDelete
 67. அஹா... நானும் மாட்டிக்கிட்டனா????? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 68. நீங்க பதிவில் எழுதியிருக்கிற பெரும்பாலான சொற்களை இப்ப தான் முதமுதல அறிஞ்சுக்கிறன்...

  ReplyDelete
 69. என்னையும்... தொடர் விளாட்டிலை ஒட்ட வைச்சதுக்கு நண்றிங்க.. ஆனாலும்.. இந்த மாச கடைசி கொஞ்சம் பிஸியா வேலை வந்திட்டுதுங்க... ஆணி நிறைஞ்சிரிச்சு... அதானை மன்னித்து கொள்ளுங்க உடணடியாக இந்த விளாட்டிலை ஒட்டிக்க முடியலை... ஆனா நிச்சயம் பதிவிடுவன் ..
  மன்னிப்போடு
  கவின்

  ReplyDelete
 70. என்னையும்... தொடர் விளாட்டிலை ஒட்ட வைச்சதுக்கு நண்றிங்க.. ஆனாலும்.. இந்த மாச கடைசி கொஞ்சம் பிஸியா வேலை வந்திட்டுதுங்க... ஆணி நிறைஞ்சிரிச்சு... அதானை மன்னித்து கொள்ளுங்க உடணடியாக இந்த விளாட்டிலை ஒட்டிக்க முடியலை... ஆனா நிச்சயம் பதிவிடுவன் ..
  மன்னிப்போடு
  கவின்//

  மெதுவா செய்ங்க!1

  ReplyDelete
 71. நீங்க பதிவில் எழுதியிருக்கிற பெரும்பாலான சொற்களை இப்ப தான் முதமுதல அறிஞ்சுக்கிறன்...///

  வாங்க

  ReplyDelete
 72. வந்துட்டேன்..///

  வாங்க புதுகை!!!!!!!!

  ReplyDelete
 73. aha...maatinena:-)) good,useful thought..seekiram yeluthidarenga deva:-)

  ReplyDelete
 74. aha...maatinena:-)) good,useful thought..seekiram yeluthidarenga deva:-)//

  Welcome!!
  உங்களுக்கு ஒரு வேலை தந்தாச்சு!!!
  மெதுவா போடுங்க.

  ReplyDelete
 75. // வேத்தியன் கூறியது...

  ஆஹா....
  திரும்பவுமா ???
  சரி நம்ம தமிழ்.. நாம எழுதாம வேற யாரு எழுதுவாங்க ???
  கலக்குவோம்ல... //

  வந்து கலக்குங்க... எதிர்பார்க்கின்றோம்

  ReplyDelete
 76. ஆஹா...

  ரெண்டு நாள் நம்ம நெட்டு புட்டுகிடுச்சுன்னா இப்படியா...

  தம்பிகளுக்கு பிடிவாரண்டா...

  ரொம்ப தப்பு...

  ReplyDelete
 77. // நட்புடன் ஜமால் கூறியது...

  அட நமக்கு முன்னாடியேவா! //

  தம்பி வேகம் குறைஞ்சு போச்சு...

  தம்பி வில்லு படம் பார்த்த எஃபக்டா...

  பழையபடி ஃபார்முக்கு வாப்பா...

  ReplyDelete
 78. // நட்புடன் ஜமால் கூறியது...

  எப்போதுமே நாங்க மூனு பேரும் இந்த ப்லாக்ல குத்தவச்சி உட்கார்ந்து இருக்கோம்

  எங்கள காணோம்ன்னு ஒரு பதிவா ...//

  அதானே...

  எல்லாம் சரி ரெண்டு நாள் நான் இல்லை, நெட் லொள்ளு பண்ணிடுச்சு அப்படின்னா, என்ன மறந்துடீங்களே...

  அவ்...அவ்....அவ்...அவ்

  ReplyDelete
 79. // அ.மு.செய்யது கூறியது...

  //(காணாமல் போன சொற்கள் போல

  இவர்கள் திடீரென்று காணாமல் போனவர்கள்???)
  //

  காணாமல் போகும்போது சிவப்பு நிற அரைக்கால் சட்டையும் நீல நிற கோடுபோட்ட சட்டையும் அணிந்திருந்தனர்னு சொல்லாத கொற தான் போல..//

  காணமல் போகும் போது வெள்ளை நிறத்தில், கறுப்பு கட்டங்கள் போட்ட சட்டையும், அரை டிராயரும் அணிந்து இருந்தார்கள் என்று சொல்லாமல் விட்டீர்களே...

  ReplyDelete
 80. // அ.மு.செய்யது கூறியது...

  //வெஞ்சனம்- தொட்டுக்கொள்ளும் கூட்டு,பொறியல் //

  இந்த ஒரு சொல் வழக்கு மட்டும் இன்னும் எங்க வீட்டில இருக்குங்க... //

  கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருங்குங்க.

  ReplyDelete
 81. // thevanmayam கூறியது...

  ஏன் இந்த கொலவெறி !!!!!//

  ஒரு அன்புதான்!//

  அன்பு ரொம்ப ஜாஸ்தியா இருக்குங்க...

  ReplyDelete
 82. // அன்புமணி கூறியது...

  ஆகா! ராகவன் அண்ணே வேறமுன்னாடியே கட்டளையி்ட்டிருந்தாக. இப்ப நீங்களுமா? தப்பிச்சா, அடுத்து எனக்கு ஒரு பதவு போடுவீங்க. சீக்கிரம் வர்றேன், தயாரிப்போடு! //

  அன்பு குடந்தை மானத்தை காப்பத்துபா.....

  ReplyDelete
 83. // RAD MADHAV கூறியது...

  னல்ல டமில் பெஸரது, எலுதுரது கு, நா இர்கும்போது எய்ன் எல்லாறும் வேர ஆல தேடுது. ஒண்ணும் புறியல.

  (பயப்பட்டு விடாதீர்கள். வழக்கமாக தொலைக்காட்சியில் நாம் கேட்கும் தமிழை
  கொஞ்சம் பேசிப்பார்த்தேன்)//

  ஆஹா... நல்லா கிளப்பறாயங்க பீதிய...

  ReplyDelete
 84. // அபுஅஃப்ஸர் கூறியது...

  //இப்படியே ஏகப்பட்டது இருக்குங்க! எனக்குத்தெரிந்து சில சொல் எங்க ஊரிலேயே காணோம்! /

  போலீஸ்லே கம்ப்ளெயின் பண்ணியாச்சா //

  எப்.ஐ.ஆர். காப்பி கொடுத்தாங்களா !!!

  ReplyDelete
 85. // RAD MADHAV கூறியது...

  இந்த பதிவிற்கு எனது தலையங்கம்

  'இன்ஸ்பெக்டர் தேவாவும் மூன்று கைதிகளும்' //

  இஃகி...இஃகி...இஃகி

  ReplyDelete
 86. // அபுஅஃப்ஸர் கூறியது...

  //(காணாமல் போன சொற்கள் போல இவர்கள் திடீரென்று காணாமல் போனவர்கள்???) ஜமால், செய்யது, அபு அப்ஸர் ஆகியோரை எங்கு கண்டாலும் உடன் தகவல் தரவும் (எப்படி!!! காலையிலேயே ஆரம்பிச்சாச்சு வேலையை!!)./

  ராத்திரி பூரா படுத்திக்கிட்டே யோசிச்சீங்களோ //

  ராத்திரி எல்லாம் தூங்கவே மாட்டீங்களா...

  ReplyDelete
 87. // ’டொன்’ லீ கூறியது...

  இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..

  ஜமால் அப்ஸர் செய்யது மூவருக்கும் எமது சிங்கைப் பதிவர்கள் தகுந்த பாதுகாப்பு வழங்குவார்கள் //

  வாழ்க ’டொன்’ லீ ...

  ReplyDelete
 88. // அபுஅஃப்ஸர் கூறியது...

  //’டொன்’ லீ கூறியது...
  இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..

  ஜமால் அப்ஸர் செய்யது மூவருக்கும் எமது சிங்கைப் பதிவர்கள் தகுந்த பாதுகாப்பு வழங்குவார்கள்
  //

  பார்த்தீங்களா தேவா, இப்போவாவது புரியுதா எங்க பவரை, உலகம் முழுவதும் சப்போர்ட்டுக்கு ஆள் இருக்கு...

  நன்றி டொன்லீ தாங்கள் ஆதரவுகரத்துக்கு
  அப்புறம் பிடி வாரண்ட் போட்டா ஃபிளைட் எரிப்போம், கப்பலை தீயிட்டு கொலுத்துவோம்....

  இப்படி நான் சொல்லலே, எம்மக்கள் சொல்லக்கேள்விப்பட்டேன் //

  என்னாது இது... ரொம்ப வன்முறையா இருக்கே...

  ReplyDelete
 89. // வேத்தியன் கூறியது...

  பதிவு போட்டாச்சு...
  வந்து ஒரு லுக்கை விட்டுட்டு போங்க... //

  இங்க ஒரு செஞ்சு அடிச்சுட்டு வருகின்றேன்..

  ReplyDelete
 90. // அன்புமணி கூறியது...

  தலைப்பை பார்ததும் எதோ லொள்ளு பதிவோன்னு நினைச்சுத்தான் வந்தேன். ஆனா எனக்கு விரிச்ச வலைன்னு தெரியாது! //

  கண்ணால் காண்பது பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரித்து அறிவதே மெய்...

  ReplyDelete
 91. கும்மி அடிச்சவங்களை வச்சு கும்மி அடிச்சாச்சு...

  இனிமே பதிவ வச்சு கும்மி அடிக்கணும்

  ReplyDelete
 92. // காரணம் யாராவது சொன்னா நல்லா இருக்கும்! //

  தெரிஞ்சா சொல்லமாட்டோமா...

  அவ்...அவ்....அவ்...அவ்....

  ReplyDelete
 93. // ஏன் சொல் உபயோகமில்லாமப்போகுதுன்னு ஒரே ஆச்சரியமா இருக்கு! //

  அதானே... ஏன்... ஏன்...

  ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை

  ReplyDelete
 94. // அக்காரம்-ருத்திராட்ச கொட்டையால் ஆன மாலை //

  ஆஹா கேள்விப்பட்டதே இல்லையே...

  இதில் இருந்துதான் அக்ரஹாரம் வந்திருக்குமா...

  ReplyDelete
 95. // வாங்குப்பலகை-குளிக்க, சமைக்க அமரும் சிறிய மரப்பலகை //

  மனைப் பலகை என்றும் இதை அழைப்பர்களோ...

  ReplyDelete
 96. அப்பாடா... செஞ்சுரி அடிச்சாச்சு...

  ReplyDelete
 97. // நம்ம கொஞ்சம் அதிகபட்சம்தானே! //

  ஆமாம்... ரொம்ப அதிகம்...

  நடக்கட்டும்... நடக்கட்டும்

  ReplyDelete
 98. நிறைய தமிழ் வார்த்தைகள்.. தேவா.. எனக்கு ஸ்கூலில் தமிழ் பாடங்களுக்கு /பாடல்களுக்கு பின்னாடி வருமே அந்த அருஞ்சொற்பொருள்கள் அகராதி படித்தது போல இருந்தது.. உண்மையில் நீங்கள் குறிப்பிட்டுள்ள எந்த வார்த்தையையுமே நான் வழக்கில் பார்த்ததே இல்லை.. கலக்கிடீங்க ..

  இந்த நல்ல தொடரை ஆரம்பித்தவருக்கும் என் பாராட்டுகள் ..தொடரப் போகிறவர்களுக்கு என் வாழ்த்துகள் !!!

  ReplyDelete
 99. அப்பாடா ..தொடர் பதிவு போட்டாச்சு

  ReplyDelete