Monday, February 23, 2009

செல்லில் நிர்வாணப்படம்-எலிசபெத் வோங்-பதவி விலகல்!!

சிலாங்கூர் நிர்வாக மன்ற உறுப்பினரும் புக்கிட் லான்ஜான் தொகுதி சட்ட மன்ற உறுப்பினருமான எலிசபெத் வோங், அவரது நிர்வாணப் படங்கள் பொது மக்களிடையே பரப்பி விடப்பட்டதைத் தொடர்ந்து தமது இரு பதவிகளையும் ராஜினமா செய்திருக் கிறார்.

இதனால் இரு மாதங் களுக்குள் 3வது இடைத் தேர்தல் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அவர் நிர்வாணமாக தூங்கிக் கொண்டிருந்த புகைப்படங்கள் செவ்வாய் கிழமை அன்று கைத் தொலைபேசி வழியாக பரவியதைத் தொடர்ந்து மலேசியாவில் அரசியல் புயல் வீசியது.

“நான் தவறு எதுவும் செய்யவில்லை. திருமண மாகாத ஒரு பெண் என்ற நிலையில் என்னுடைய காமத்தன்மை குறித்து வெட்கப்படவில்லை,” என்று கண்ணீருடன் எலிசபெத் வோங் சொன்னார்.

“நான் தொடர்ந்து மக்களுக்கு சேவை ஆற்றுவேன், நீதிக்காகப் போராடுவேன்,” என்றும் நாடறிந்த மனித உரிமைக்காகப் போராடும் எலிசபெத் வோங் சொன்னார்.
நிர்வாணப் படங்கள் உங்களுடையதா? என்ற கேள்விக்கு அவர் மறுப்பு தெரிவிக்கவில்லை.

ஆனால் அவருடைய முன்னால் காதலர் அவருக்குத் தெரியாமல் அந்தப் புகைப்படங்களை எடுத்ததாக பத்திரிகைத் தகவல்கள் தெரிவிக் கின்றன.
அண்மையில் எலிசபெத் வோங்கும் அவருடைய காதலரும் பிரிந்து விட்டதாகக் கூறப்பட்டது.

சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் எலிசபெத் வோங்கின் சர்ச்சை குறித்து மேல்நடவடிக்கை எடுப்பது குறித்து  மாநில அரசு, சுல்தானின் ஆலோசனையை நாடும்.

“அவ்விவகாரம் பற்றி விளக்கமளிக்கவும் ஆலோசனை பெறவும் சுல்தானைச் சந்திப்பேன்”, என்று மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் இன்று ஓர் அறிக்கையில் கூறியிருந்தார்.

“சில தரப்பினர், அவரின் (வோங்) நற்பெயருக்கும், ஒழுங்குக்கும் களங்கம் கற்பிக்கும் இப்படிப்பட்ட வெறுக்கத்தக்க செயலில் ஈடுபட்டிருப்பது அவப்பேறான ஒரு விசயமாகும்.

“இப்படிப்பட்ட வெட்கக்கேடான செயலையும் அதைச் செய்தவர்களையும் கண்டிப்பதில் சிலாங்கூர் மக்களும் சக மலேசியரும் ஒன்று சேர்வார்கள் என்று நம்புகிறேன்”, என்றாரவர்.

தமது நிர்வாணப் படங்கள் பொதுமக்களிடையே புழக்கத்துக்கு வந்தததன் தொடர்பில் வோங், இன்று காலை  புக்கிட் லஞ்சான் சட்டமன்ற பதவியையும் ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியையும் துறந்தார்.

கட்சியின் நலனை முன்னிறுத்தி வோங் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார் என்று காலிட் கூறினார்.

வோங்கிடமிருந்து பதவி விலகல் கடிதம் கிடைக்கப்பெற்றதை காலிட் உறுதிப்படுத்தினார்.

“அவருக்கு இது ஒரு சிரமமான நேரம். அதனால் முதலில் விடுப்பில் சென்று நன்கு ஓய்வெடுக்குமாறு ஆலோசனை கூறியுள்ளேன்”, என்றாரவர்

11 comments:

 1. பெண்கள் எங்கு பார்த்தாலும் கொடுமை படுத்தப்படுகிறார்கள்.  அதிலும் இம்மாதிரி பட்மெடுத்த ரொம்ப கொடுமைங்க!!!

  அவங்க மனசு எவ்வளவு கஷ்டப்படும்????

  நாந்தான் முதல்லன்னு நினைக்கிறேன்...

  ReplyDelete
 2. கம்ப்யுடேர் இன்டர்நெட் இருந்தா உருப்படிய எதுவும் பண்ண தெரியாத கிறுக்கு பசங்க....

  இதுகெல்லாம் எங்க உருப்பட?

  ReplyDelete
 3. தனிமனித சுதந்திரத்தில் தலையிட இவர்களுக்கெல்லாம் யார் அதிகாரம் கொடுத்தது என்றுத்தெரியவில்லை.

  அதிலும் பெண் அரசியலில் இருந்தால், அவரை எவ்வளவு மிக மட்டமாக விமர்சிக்க வேண்டுமோ அவ்வளவு மட்டமாக விமர்சிக்க வேண்டியது..

  இவர்கள் எல்லாம் என்றுதான் திருந்துவார்களோ....

  ReplyDelete
 4. பெண்கள் எங்கு பார்த்தாலும் கொடுமை படுத்தப்படுகிறார்கள். அதிலும் இம்மாதிரி பட்மெடுத்த ரொம்ப கொடுமைங்க!!!

  அவங்க மனசு எவ்வளவு கஷ்டப்படும்????
  ////

  இதையே நானும் சொல்லுதேன்

  ReplyDelete
 5. பெண்கள் எங்கு பார்த்தாலும் கொடுமை படுத்தப்படுகிறார்கள். அதிலும் இம்மாதிரி பட்மெடுத்த ரொம்ப கொடுமைங்க!!!

  அவங்க மனசு எவ்வளவு கஷ்டப்படும்????

  நாந்தான் முதல்லன்னு நினைக்கிறேன்.//
  உண்மைதான் ஆதவா!

  ReplyDelete
 6. கம்ப்யுடேர் இன்டர்நெட் இருந்தா உருப்படிய எதுவும் பண்ண தெரியாத கிறுக்கு பசங்க....

  இதுகெல்லாம் எங்க உருப்பட?///

  உணர்வுகளை,மனிதரை மதிக்காதவர்கள்!

  ReplyDelete
 7. தனிமனித சுதந்திரத்தில் தலையிட இவர்களுக்கெல்லாம் யார் அதிகாரம் கொடுத்தது என்றுத்தெரியவில்லை.

  அதிலும் பெண் அரசியலில் இருந்தால், அவரை எவ்வளவு மிக மட்டமாக விமர்சிக்க வேண்டுமோ அவ்வளவு மட்டமாக விமர்சிக்க வேண்டியது..

  இவர்கள் எல்லாம் என்றுதான் திருந்துவார்களோ..///

  இப்படி நபர்கள் இருந்துகொண்டே இருப்பர்..

  ReplyDelete
 8. பெண்கள் எங்கு பார்த்தாலும் கொடுமை படுத்தப்படுகிறார்கள். அதிலும் இம்மாதிரி பட்மெடுத்த ரொம்ப கொடுமைங்க!!!

  அவங்க மனசு எவ்வளவு கஷ்டப்படும்????
  ////

  இதையே நானும் சொல்லுதேன்//

  உண்மைதான்!

  ReplyDelete
 9. என்னா தேவா சார்
  உலக செய்திகளை சொல்லி கலக்குறீங்க‌

  ம்ம் கீப் இட் அப்

  ReplyDelete
 10. அன்புள்ள தேவா,
  ஒரு பெண்ணை தரம் தாழ்த்தனும்னா இது போல் செய்தால் தான் உண்டு என்று நினைப்பது ரொம்ப கவலை தரும் விஷயம்..

  உதாரணமாய் தெரிந்தே நான்கு மனைவியர் வைத்திருக்கும் நமது தமிழக முதலமைச்சர் கருணாநிதி அவர்களை யாரும் அவரின் ஒழுக்கத்தை வைத்து விமரிசிப்பது இல்லை.. ஆனால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களை 'வப்பாட்டி ' என்று விளித்து ஒரு நண்பர் பின்னூட்டம் (இதற்கு முன் படித்த ஒரு பதிவில் ) இட்டு இருக்கிறார்..
  வாயாடி ஜெயலலிதா என்று சொல்லி இருக்கலாம்.. அவரால் வாயாடுவதை தவிர ஒரு பிரயோஜனமும் என்றும் இருந்ததில்லை என்று சொல்வது போல.. ஏனோ பெண்களை பலரும் அவர்களது உடல் சார்ந்த குணாதிசயங்களை வைத்தே எடை போடுகிறார்கள்..

  நம்முடைய நியாயத் தராசுகள் பிடித்தவருக்கு ஒரு நீதியையும் , பிடிக்காதவர்களுக்கு ஒரு நீதியையும் காட்டுகிறது இல்லை.. !! ம் " மங்கையராய் பிறந்ததற்கு மா பாவம் செய்திருக்க வேண்டுமோ " என்றே பல நேரங்களில் நான் நினைக்கிறேன்..

  அன்புடன்
  ஜானு

  ReplyDelete
 11. அன்புள்ள தேவா,

  ஜானு//

  உண்மைதான்!
  பெண் செய்தால் தவறு!
  ஆண் செய்தால் ஆண்மை!
  தாங்கள் வருந்த வேண்டாம்..
  ”உள்வாய் வார்த்தை உடன்ம்பு தொடாது’’
  தேவா

  ReplyDelete