Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Monday, February 23, 2009

திரைப் படத் தயாரிப்பாளர் கள் சங்கம் புதிய கட்டுப்பாடுகள்! நடக்குமா?

நடிகர்,கலைஞநடிகைகள், இயக்குனர்கள், தொழில் நுட்பக்கலைஞர்கள் மற்றும் திரைப்படத் தொழிலில் இறங்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் தமிழ் திரைப் படத் தயாரிப்பாளர் கள் சங்கம் புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

முன்னணி நடிகரின் படம் தோல்வியடைந்தால் அதன் தயாரிப்பாளருக்கு மீண்டும் படம் நடித்து கொடுத்து நஷ்டத்தை ஈடுகட்ட உதவ வேண்டுமென நடிகர், நடிகைகளுக்கு அதிரடி கட்டுப்பாடு போடப் பட்டுள்ளது.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் சென் னையில் நேற்று நடந்தது.தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராமநாராயணன் தலைமையில் நடந்த கூட்டத்தில் இயக்குனர்கள் சங்கம் சார்பில் பாரதிராஜா, நடிகர் சங்கம் சார் பில் ராதாரவி உட்பட தயாரிப்பாளர்கள் 600 பேர் கலந்து கொண்டனர்.இதில்தான் இப்படி ஒரு முடிவு பண்ணி இருக்காங்க!!

பெரிய நடிகர்களை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளருக்கு அந்தப் படம் நஷ்டமடைந்தால் அந்தப் படத்தில் நடித்த நாயகன், நாயகி, இயக்குனர் மூவரும் அந்தப் படம் ரிலீஸ் ஆன தேதியிலிருந்து ஓராண்டிற்குள் அந்த தயாரிப்பாளரின் விருப்பத்தின் பேரில் அவருக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்யும் வகையில் படம் நடித்து தர வேண்டும்.

சங்கத்தின் கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப் பட்டுள்ளது!

இதெல்லாம் நடக்குமா? சாமி!

சிறிய பட் ஜெட் படங்கள் வாரத்தில் இரண்டு படங்கள் மட் டுமே வெளியிடப்படும்.
பெரிய பட்ஜெட் படங் கள் ரிலீஸ் ஆன நாளிலிருந்து ஒரு வருடம் கழித் தும், சிறிய பட்ஜெட் படங்கள் ஆறு மாதத்திற்கு பிறகும் "டிவி'யில் வெளியிட்டுக் கொள்ளலாம்.

படத்தை வினியோகஸ்தர்கள் இன்றி நேரடியாக ரிலீஸ் செய்தவர்கள் எந்த நேரத்திலும் அவர்கள் விரும்பும் "டிவி'யில் வெளியிட்டுக் கொள்ளலாம்.

"விசிடி' நேரடி ரிலீஸ் குறித்தும் சங்கத்துடன் கலந்து பேசி முடிவு எடுத்துக் கொள்ளலாம்.

நடிகர், நடிகைகள், இயக் குனர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் அட்வான்ஸ் அடிப்படையில் தான் படங் கள் முடித்துக் கொடுக்க வேண்டும்.

அட் வான்ஸ் விவரங்களை தயாரிப் பாளர்கள் சங்கத்தில் தெரிவிக்கும் தயாரிப்பாளருக்கு மட்டுமே சங்கம் உதவும்.

கார்ப்பரேட் நிறுவனங் கள் படங்கள் தயாரிக்கும் போது, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நிரந்தர உறுப்பினர்களாக உள்ள குறைந்தது மூன்று நேரடிப் படங்களையாவது தயாரித்துள்ள தயாரிப்பாளரின் பெயருடனும், அவரின் ஒப்புதலோடும் தான் படம் தயாரிக்க வேண்டும்.

அதே சமயம் தயாரிப் பாளருக்கு நியாயமான மரியாதையும் தரப்பட வேண் டும்.

மேலே இருப்பதைப்படித்தால் தலை சுத்துதா?

இதெல்லாம் நம்ம ஊரில் நடக்குமா?

Thursday, February 5, 2009

எச்சரிக்கை காதலர்களே! உஷார்!

காதலர்களே உஷார்!!!

கண்ட இடங்களில் கண்மூடித்தனமாக காதலிக்கும் காதலர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் .வருகிற 14 ஆம் தேதி அல்லாக் காதலர்களும் அமுக்கி வாசிங்க.நாங்களுமா நீங்களுமான்னு கேள்வியெல்லாம் கேக்கப்படாது.

எங்கேன்னு கேக்கறீங்களா?
நம்ம கலாச்சாரத்தலை நகரம் பெங்களூரூவில்தான்!!

என்ன சங்கதின்னு கேக்கிறீங்களா?
கல்யாணம் பண்ண முடியாமல் கன்னா பின்னான்னு பீச்சு,பார்க்குன்னு மணிக்கணக்கில் காதல் கடலை உடைப்பவர்களையும்,பலவித தமிழ்ப்பட காதலர் போஸ்களில் கட்டுண்டு மெய்மறந்து கிடக்கும் காதலர்களுக்கும் ராம சேனா சார்பில் ஆன் தி ஸ்பாட் கல்யாணம் நடத்திவைக்கப்படுமாம்.

காதலர் தினம் கொண்டாடக்கூடாது, அது கிறிஸ்துவ பாணியில் செய்யப்படுவது.இந்தியர்கள் கடைப்பிடிக்கக் கூடாதுன்னும் சொல்லி இருக்காங்க.

சொன்னதோட நின்னா பரவாயில்லை.அவர்கள் அமைப்பு பொதுக்குழு கூடி
கலந்து முடிவு பண்ணி தீர்மானம் நிறைவேற்றி அவங்க அமைப்பு சார்பில் 5 குழு உருவாக்கி இருக்காங்க.

அந்த 5 குழுக்களும் வீடியோ காமிராவோட(பாருங்க வீடியோ செலவும் மிச்சம்),தாலிக்கயிறுகளுடன் சுத்துவாங்க.

அப்படியே காதலர்களை கையும் மெய்யுமா பிடித்து தாலியைக்கட்ட வைப்பாங்க! தாலி கட்டச்சொன்னாக் கூட பரவாயில்லை. ரெஜிஸ்ட்ரார் ஆபீஸுக்கும் கூட்டிப்போய் பதிவும் பண்ணிக்குடுத்துவிடுவார்கள்(ஃஃஃபீஸ் அவங்களே கட்டிவிடுவாங்களேன்னு கேக்கிறீங்க அதானே! அது நேரில் போய் தெரிந்து கொள்க.)

கல்யாணம் பண்ணமுடியாம வருடக்கணக்கில் பீச்சுகளிலும், பார்க்குகளிலும் உருண்டு கிடக்கும் மக்கள் துணிந்து போகலாம்.கல்யாணம் பண்ணிவிட்டு அந்த அமைப்பிலேயும் சேந்துகிட்டீங்கன்னா வீட்டாளுங்க ஒன்னும் பண்ண முடியாது..

கண்ணாலே காதல் கவிதை படிச்சு(படிப்பை மறந்து) திரியும் சின்னப்பசங்களும்,தள்ளு முள்ளு கேசுகளும் மறந்தும் வீட்டை விட்டு வெளியே போயிடாதீங்க. அன்னைக்கு லீவைப்பொட்டுட்டு சமத்தா வீட்டில உக்காந்து டி.வி.பாருங்க

எச்சரிக்கை தேவா..

Tuesday, January 27, 2009

கொஞ்சம் தேநீர்-7! தாங்க முடியவில்லை!!!

காலையில் கவிதை, இல்லாவிட்டால்
வேறு ஏதாவது எழுதுவது என்று
உக்காந்தேன்!நான் பேப்பரில் எழுதுவது
இல்லை!நேரே பிளாகில்தான் எழுதுவேன்!

இந்த நேரத்தில்,ஜாலியா எழுத முடியல.
பின் வரும் கவிதையை,நிறைய இடத்தில்
அழுது கொண்டே எழுதினேங்க!
ஒரு சிறு குழந்தையின் பார்வையில்....




அதிரும் வெடியின்
ஒலியில்
நகரும் வண்டிகளின்
கரகரக்கும் மண் அரையும்
சத்தத்தில்!!
இடிந்து கொட்டும் செங்கல்
மண் குவியலில்
அமைதியாய் நான்!!

ஷெல்லின் ஒலி பயமறியாது
சத்தம் மரத்துப்போன
காது!

எரியும் தீயின் வெம்மை
அறியாது
வெந்து போன என்
இதயம்!!

யாரும் சோறூட்ட
வேண்டாம்!
மடியில் போட்டு
தாலாட்டவும் வேண்டாம்
நான் உறங்க!

கல் தரையும்,
காய்ந்து ஓய்ந்த
கண்ணீரும் போதும்
நான் உறங்க!!

மண்ணும்,கல்லும்,
இரத்தமும்,சதையும்
ஒன்றாய்,
பயமில்லை எனக்கு!

பாதையில் என்னை
இழுத்து எறிந்தாலும்
வலிக்கவில்லை
எனக்கு!!

லண்டன் சித்தப்பா
அனுப்பிய
கரடி பொம்மையும்,

கனடா மாமா
அனுப்பிய ஏரோப்ப்ளேனும்
எங்கே?
யாராவது பார்த்தீர்களா?

அப்பா சொன்னார்
நான் படித்து
ஏரோப்பிளேனில்
வெளிநாடு போவேனாம்!
அப்பா,அம்மாவையும்
கூட்டித்தான் போவேன்!

அம்மா சொன்னா
நாளை
படகில் வேற வீட்டுக்கு
போகலாம் என்று!

பள்ளிக்கூடம்
எப்பத் திறப்பாங்க!
போய் ரொம்ப நாளாச்சு!

பள்ளிப்பையையும்
காணோம்!!
புத்தகங்களும் காணோம்!
யாராவது பாத்தீங்களா?

ஏரோப்ப்ளேனும்,
படகும்
எங்கே வரும்?
நானும்,அம்மாவும்,
அப்பாவும் போகணும்!

அம்மா சொல்லியிருக்காங்க!
பசிச்சா அழுகக்கூடாதுன்னு!
மாமாவும்,
சித்தப்பாவும்
எனக்கு பிஸ்கட்,
சாக்லேட் எல்லாம்
வாங்கி வருவாங்களாம்!

சித்தப்பாவும்,
மாமாவும் இன்னும்
வரவேயில்லை!

யாருக்கும் சொல்லதீங்க!
ஒரு காகிதக் கப்பல்
செஞ்சு
ஒளிச்சு வைச்சிருக்கேன்!
அதுல
அம்மா,அப்பா
நான் எல்லாம்
போயிருவோம்.

சரி என்
அம்மா,அப்பாவை
பார்த்தீர்களா?

ஏன் இன்னும்
வரவில்லை அவுங்க!
அவங்களை
விட்டு
எவ்வளவு நேரம்
தனியா இருப்பேன் நான்?

எனக்கு
அழுகையா வருது!
ஆனாலும்
அம்மா சொல்லியிருக்காங்க
அழுகக் கூடாதுன்னு!

என் அம்மாவையும்,
அப்பாவையும்
யாராவது
பார்த்தா சொல்லுங்களேன்!!

Thursday, January 22, 2009

இடுப்பு எலும்பு முறிவு-அன்புடன் ஒரு சிகிச்சை-1

இடுப்பு எலும்பு முறிவு-சிறு விளக்கம்-1
இடுப்பு எலும்பு முறிவு
பற்றி சிறிய அறிமுகம்.......





அன்புடன் ஒரு சிகிச்சையில் இடுப்பு எலும்பு முறிவு பற்றி மேலோட்டமாக எழுதி இருந்தேன்.அதில் இருந்த அறிவியலைவிட மனிதாபிமானமே அனைவராலும் விரும்பப்பட்டது.

ஆயினும் அது ஒரு அறிமுகமே!

இடுப்பு எலும்பு முறிவு பெரும்பாலும் வயதானவர்களுக்கு எலும்பில் சத்துக்குறைவால் ஏற்படுகிறது.சாதாரண சிறு சறுக்கல்,தடுமாறி விழுவதுகூட போதும்.

தொடை எலும்பின் மேற்பகுதி எலும்பு(FEMUR) அதாவது இடுப்புப்பகுதி இரண்டு இடங்களில் உடையும்!

1.சிகப்பு நிறத்தில் காட்டியிருக்கும் எலும்பின் கழுத்துப்பகுதி!
2.ஊதா நிறத்தில் காட்டப்பட்டு இருக்கும் ந்லும்பின் கழுத்துப்பகுதிக்கு வெளியில் உள்ள (TROCHANTER) எலும்புப்பகுதி!!

ரொம்ப சாதாரணமான விஷயங்க.

சிகப்புநிறத்தில் உள்ள எலும்பின் கழுத்துப்பகுதிக்கு இரத்த ஒட்டம் ஊதா நிறப்பகுதியில்,அதாவது மூட்டின் வெளிப்பகுதியில் இருந்துதான் போகிறது.
இந்த இடம் புரிந்தால் எல்லாம் எளிமை. இல்லை புரியாம தலை சுத்துதா?

எலும்பின் சிகப்புப் பகுதியான கழுத்துப்பகுதியில் எலும்பு உடைந்தால் அதற்கு மேல் உள்ள மூட்டு உருளை இரத்த ஓட்டம் இல்லாமல் பட்டுப்போகும்.
அப்படி ஏற்படும்போது நாம் உருளையை மாற்ற வேண்டும்!!
பக்கவாட்டில் உள்ள படம் உருளை மாற்றிய பின்...

2.மூட்டின் வெளிப்பகுதியில்-அதாவது ஊதாநிறப்பகுதியில் உடைந்த்தால் எலும்புக்கு இரத்த ஒட்டம் பாதிக்காது. ஆகையால் எலும்ப் பட்டுப்போகாது!
ஆகையால் எலும்பை மாற்ற வேண்டிய தேவை இல்லை.
தகடு, திருகாணிகள் கொண்டு சரி செய்து விடலாம்.
ஓரளவாவது நான் சொல்ல வந்ததை சொல்லிவிட்டேனா? இல்லை சொதப்பி விட்டேனா?
எதாக இருந்தாலும் பின்னூட்டத்தில் கேளுங்கள்! விளக்க முயற்சிக்கிறேன்.

இன்னொரு சங்கதி!
எனக்கு உரைகளுக்கு நடுவே குறிப்பிட்ட இடங்களில் படத்தை சேர்க்கத்தெரியவில்லை. கணிணி மக்கள் சொல்லுங்களேன்...

அன்புடன் தேவா..




Friday, January 16, 2009

ஜாலியா ஒரு கவிஜ !!!

நீண்ட நாளா எழுதனும்னு ஒரு கவிதை
வைத்து இருந்தேன்.
சும்மா ஜாலியான கவிதைதான்!
ஜாலி மூடில் படிங்க!

புதுசா கவிஜ எழுதுற நம் அன்பு வலை
கவிஞ்சர்களுக்கு இதை சமர்ப்பிக்கிறேன்.
------------------

அம்பை எடுத்து
வில்லை வருத்தினான்!
உணவு கிடைத்தது!

பல்லைக்கடித்து
உணவை வருத்தினான்
சக்தி கிடைத்தது!

உடலை வருத்தி
உடற்பயிற்சி செய்தான்
கட்டுடல் கிடைத்த்து!

உளியை எடுத்து
கல்லை வருத்தினான்
சல்லிக்கல் கிடைத்த்து!

கண்ணை வருத்தி
பாடங்கள் படித்தான்
பாஸ் மார்க் கிடைத்த்து!

இதையெல்லாம் கண்டு பின்னர்

பேனாவை எடுத்து
பேப்பரை வருத்தினான்!!
கவிதை பிறக்குமென்று!!!

படித்தவர்.........வருந்தினர்!!!!
------------------

பி.கு:
பொறுமையாக படிச்சதற்கு நன்றி!!
திட்டுறவங்க நல்லா திட்டுங்க!!
எல்லாத்தயும் பின்னூட்டமாவும்
ஓட்டாவும்
குத்துங்க!!

கவிஞ்சர்.தேவா...

Monday, January 12, 2009

அன்புடன் ஒரு சிகிச்சை!!!

அந்த அம்மாவுக்கு 50 லிருந்து 60 வயதுக்குள் இருக்கும்! நடுத்தரமான உடலமைப்பு!களைப்பும் ,உடல் பலகீனமும் பார்த்தவுடனேயே தெரிந்தது!!கண்கள் வலியில் உக்காரலாமா என்று கெஞ்சின!!!
உள்ளே வரும்போது தன்னால் நடந்து வர முடியாமல் இரண்டு பேர் இரண்டு பக்கமும் பிடித்துக்கொண்டு கைத்தாங்கலாக கூட்டிக்கொண்டு வந்தார்கள்!
பார்த்த்வுடனேயே அவர்கள் நடக்க சிரமப்படுகிறார்கள் என்பது தெரிந்தது!!!கூட்டிக்கொண்டு வந்தது ஒரு ஆண் ஒரு பெண்!..... அந்த அம்மாவுக்கு மகனோ! மகளோ!முகஜாடையில் சொந்தம் போலத்தெரிந்தது!
எனக்கு அவர்கள் இருவரையும் பார்க்கும் போது கோபம்தான் வந்தது! நடக்க முடியாத பெண்மணியை சிரமப்படுத்தி நடத்தி கூட்டி வருகிறார்களே என்று!!!.
கோபம் காட்டாமல் அமைதியாக!”ஏப்பா? வலி அதிகம் இருக்கும் போல இருக்கே! வீல் சேரில கூட்டி வரலாம் இல்ல! நடக்க விடாதீர்கள்! மேற்கொண்டு பிரச்சினையாகிவிடுமே! ”என்றேன்.
இல்ல சார்! நேத்துத்தான் இரவு பாத்ரூம் போகும் போது ஸ்லிப் ஆயிட்டாங்க போல இருக்கு! நாங்க யாரும் பார்க்கவில்லை!! தன்னால எழுந்து வந்து படுத்திட்டாங்க!காலையில் கொஞ்சம் வலது இடுப்பில் வலி இருக்கு என்றார்கள்! சரியாக நடக்க முடியவில்லை!அதுதான் கூட்டிக்கொண்டு வந்தோம்!!
சரி! அந்த இருக்கையில உக்கார வைங்க! ஏம்மா கால் சறுக்கி விழுந்தீர்களா? இல்லை
இடுப்பு வலி வந்து விழுந்தீர்களா? என்று கேட்டேன்...
அவர்களுக்கு சரியாக சொல்லத்தெரியவில்லை!!

மேலே கூறிய நிகழ்வு அடிக்கடி மருத்துவமனைகளில் நாம் பார்ப்பதுதான்!
நம்மில் சிலருக்கு இது பரிச்சயமாக, சொந்தக்காரர்களுக்கோ,நண்பர்களுக்கோ ஏற்பட்டதாகக் கூட இருக்கலாம்!!

மேலே கூறிய பிரச்சினை இருந்தால் பெரும்பாலும் அது இடுப்பு எலும்பு முறிவு ஆகத்தான் இருக்கும்!!வயதானவர்களுக்கு எலும்புகள் பலவீனமாக இருப்பதால் கீழே விழாமலேயே கூட இடுப்பு எலும்பு முறிவு ஏற்படுகிறது!

இதற்கு பெரும்பாலும் நாம் நுடவைத்திய சாலையில்தான் வைத்தியம் பார்க்கிறோம்!காரணம்? வயசாகி விட்டது...இனிமேல் வைத்தியம் பார்த்து என்ன பண்ணப்போகிறோம் என்ற அலுப்பு,பணவசதியின்மை இன்ன பிற காரணங்கள்!!!

இடுப்பு எலும்பு உடைந்து சரியான சிகிச்சை பெறாதவர்கள், வெகு விரைவில் நடக்கமுடியாததால், மனம் உடைந்து,தன் சுயகௌரவம் இழந்து மன நோயாளி போல ஆகிவிடுகிறார்கள்!!தான் குடும்பத்துக்கு ஒரு பாரம் போல உணர்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் அன்றாடக்கடமைகளைக்கூட அடுத்தவர் உதவி இல்லாமல் செய்ய முடிவதில்லை!

ஒரு ஆய்வின்படி 50% இடுப்பு எலும்பு உடைந்த நோயாளிகள் உடைந்து ஒரு வருடத்துக்குள் இறந்து விடுகிறார்கள்!
ஆயினும் நவீன அறுவை சிகிச்சை மூலம் நன்றாக நடக்க வைக்கவும், எவருடைய துணையும் இல்லாமல் பழைய நிலைமைபோல் வாழவைக்கவும் முடியும்!!!
நம் பாசத்துக்குரியவர்களுக்கு வயதான காலத்திலும் கௌரவமான மன நிறைவான வாழ்க்கையை அளிப்போம்! அதுவே நாம் அவர்களுக்குச் செய்யும் மிகப்பெரும் கடமையும் உதவியும்!!!

தேவா..........

Wednesday, January 7, 2009

கொஞ்சம் தேநீர்-4

அருகருகே!!!

ஆயிரம் இடைவெளிகள்
நமக்குள் இருந்தாலும்
நம்........
இதயங்கள் என்னவோ 
அருகருகேதான்!

ஆயிரம் உறவுகள்
நம்மைப்பிரித்தாலும்
நம்........
உணர்வுகள் என்னவோ
அருகருகேதான்!

ஆயிரம் வேலைகள்
நம்மை அழுத்தினாலும்
நம்.......
எண்ணங்கள் என்னவோ
அருகருகேதான்!

ஆயிரம் நிகழ்வுகள்
நம்மைத் தொலைத்தாலும்
நம்.......
இதயங்கள் துடிப்பது
ஒன்றாகத்தான்!!!!




Saturday, January 3, 2009

தமிழ் மணம் ஒரு பகிரங்க இடுகை-2


தமிழ் மணத்துக்கு வணக்கம்!!!!
நம்ம பதிவுத்திரட்டியில் இணைந்து சந்தோஷமா தினமும் ஏதாவது எழுதி உள்ள தள்ளனும்கிற அளவுக்கு இதில ஆர்வமானவங்க நிறைய பேர் இருக்கிறோம்!!!!
அதுக்கு பின்னூட்டம் போட்டு ஆதரிக்கவே ஒரு போராளிகள் குழு ஆர்வத்த்தோட உக்காந்து இருக்கு!!!
         தமிழ்மணமும், பாராட்டும் இல்லைன்னா ஒன்னுமே இல்லை!!!
         அதுனாலதான் தமிழ் மணத்தையே பாராட்டி ஒரு பதிவு போட்டேன்!!!!
என்னடா பீடிகை பலமா இருக்கேன்னு பார்க்கிறீங்களா?
         இந்த புதுவருடத்திலே எல்லாத்திலும் மாற்றம் எதிர் பார்க்கும் நாங்க தமிழ்மணத்திலும் எதிர்பார்க்க மாட்டமா?
         முதலில் தமிழ்மணத்தில் சேர்ந்த்தையே ஒரு தொடர் பதிவாப்போடலாம்!!
நீண்ட பிரச்சினைகளுக்கு அப்புறம்தான் சேர முடிந்தது!!
          இப்ப உள்ள பிரச்சினை என்னன்னா................
         
         1. தமிழ் மணத்தில் பிற திரட்டிகளில் இணைவதுபோல எளிமையாக இணைய முடியவில்லை!!! இணைவதை எளிமைபடுத்தனும்.... நிறைய பேர் இணைய முடியாம வெளிய நிற்கிறாங்க!!!! உண்மை..

         2.இணைந்தவர்கள் நிறைய பேருக்கு பதிவுப்பட்டை இணைக்க முடியவில்லை.
        
         3.சிலருக்கு புதிதாய் சேர்ந்தவர்களுக்கே பின்னூட்டம் திரட்டப்படுவதில்லைன்னு வருது!!! 

         என் பதிவுலயே தமிழ் நண்பனுக்கு பதிவுப்பட்டை இணையவில்லையே!! தமிழ்த்துளியில் மட்டும் பட்டை இருக்கு!!!
  
         4.பிரச்சினைன்னா தெரிவிக்கச்சொல்றாங்க!! சொன்னா பதில் இல்லை!!
நடவடிக்கையும் இல்லை!!!

        5.யுனிகோடில் 3 பதிவு எழுதி அனுப்பினாக்கூட யுனிகோடில் இல்லைன்னு வருது!!!!
        
        இதெல்லாம் சரிபண்ண நிறைய நடவடிக்கைகள் தேவைப்படுதுங்க!
நான் சொன்னதுல நிறைய தவறுகள் இருக்கலாம்!!!

       நிறைய எனக்குத்தெரியாமக்கூட இருக்கலாம்!!!
   
       ஆனா அதையெல்லாம் குழந்தைக்கு தாய் சொல்லித்தருவது போல தமிழ்மணம் சொல்லித்தந்து, நிவர்த்தி செய்ய வேண்டும்!!!!
         

Wednesday, December 31, 2008

தமிழ் மணம்- ஒரு பகிரங்க இடுகை


தமிழ் மணமே!!

தமிழ் நண்பர்களைத்தேடி
அலையும் போது
உன்னைக்கண்டோம்!!

இத்தனை பதிவர்கள் தமிழிலா
என்று வியப்புக் கொண்டோம்!!

எவரும் பதியும் உரிமை
கண்டு உவகை கொண்டோம்!!

கருத்து சுதந்திரம்
கொடி கட்டிப்
பறக்கக் கண்டோம்!!

கவிதைகள்
இங்கு களிநடம் புரியும்
கோலம் கண்டோம்!!

உலகமே திரண்டு
உள்ளங்கையில்
உருளக்கண்டோம்!!!

தரணித்தமிழர்
ஒன்றாய்க்கூடி
உவக்கக் கண்டோம்!!!

தமிழர் அனைவரும்
தமிழில் எழுதும்
கனவைக்கண்டோம்!!

எழுத்தில் வாராக் கருத்தை
எல்லாம் 
உன் அகத்தில் கண்டோம்!!!

புத்தாண்டு சிறக்க
வாழ்த்துக்கள்
பலர்
வழங்கககண்டோம்!!

உன்னை மறவாமல்
உன்னையும்
வாழ்த்த
உள்ளம் கொண்டோம்!!!!

                          இந்த புத்தாண்டில் 
                          தமிழ் மண நிர்வாகிகளுக்கும் 
                          தொழில் நுட்ப வல்லுனர்களுக்கும்
                           தமிழ் மணத்தை
                          மேலும் சிறப்பாக
                           வழிநடத்திச்செல்ல
                          வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!

                           தேவா.....

Thursday, December 25, 2008

கொஞ்சம் தேனீர்-3



மொழி!!!

உன் அம்மாவைப்
பார்த்தேன்
தமிழில் பேசினார்.
உன் அண்ணனைப் 
பார்த்தேன்
ஆங்கிலத்தில் பேசினான்!
உன்னைப்பார்த்தேன்
விழியால் பேசினாய்!!!!

விழி!!!

உன்னுடன் உறவாட
தினம் என் 
விழிகள் ஏங்கினாலும்,
என் கண்ணீர்த்துளிகள்
ஜன்னல்  கம்பிகளோடு
தான்!!!

தீ!!!

முத்த்மிட்டு வளர்த்த
காதல் தீயை
ஊதி
அணைக்க முடியுமா
ஊரார் வாயால்?

நேரமாகிப்போச்சுதான்!

ஆனா வந்திட்டு

சும்மா போகலாமா!

ஒரு வாய் தேத்தண்ணி

சாப்பிட்டுப்போங்க!!!

தேவா!!!

Thursday, December 18, 2008

கொஞ்சம் தேனீர்!!!

கண்ணீர்!!!!


உன் கண்களிலிருந்து வழியும்
கண்ணீர்த்துளிகளும் 
உன்
கன்னமேட்டைக்
கடந்தவுடன்
கவிதைகளாகின்றன!!
ஏனெனில் 
அவை அடுத்து விழுவது
உன் இதய மேடுகளில் தானே!!


தடங்கள்!!!


நடந்து வந்த பாதையைப்
பார்க்கிறேன்!
பல
காலடித்தடங்கள்!!!
உன்னுடயவை?
ஓ! அவை என் நெஞ்சில்!!!


காலை டீயுடன் லைட்டான
ரெண்டு கவிதையும்
சேர்த்துப்பருகுங்கள்!!!

தேவா....