Showing posts with label தமிழகம். Show all posts
Showing posts with label தமிழகம். Show all posts

Sunday, December 28, 2008

பிரபல பதிவரின் மனக்குமுறலுக்கு ஒரு பதில்!


                        எல்லோரையும் ஆதரிக்கும் மூத்த பதிவர் , சமீபத்தில் தன்னிடம் தன் மனக்குறையை கூறியதாகக் கூறியதை எழுதியிருந்தார்! 
                        அதாவது உடல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு தமிழகத்தில் சரியான மரியாதை தருவதில்லை என்றும், சான்றிதழ் வழங்குவதற்கு எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்றும் எழுதியிருந்தார்!!
                        அதைப்படித்ததில் இருந்து அதைப்பற்றி அவருக்கு விள்க்க வேண்டிய கடமை நம்மில் யாவருக்கும் உள்ளது என்பதை உணர்ந்தேன்.
                        அதன் விளைவாகவே இந்த இடுகை!!
                        அவருடைய உணர்வுகள் உண்மையனவைதான்!! ஏறக்குறைய ஊன்முற்றோர் சான்றிதழ் பெறுவது மிகவும் கடினமாக இருந்தது உண்மைதான்!!
                        தற்போது உள்ள சூழ்நிலையை நான் கூறுகிறேன்!!!
                        அவரை மறுத்தோ, அவர் சொன்னது தவறு என்றோ நான் கூற வரவில்லை!!
                        நான் இன்று காலை 9.00 மணிக்கு உடல் குறைபாடு சான்றிதழ் வழங்கும் முகாமுக்குச் சென்றேன்!! 6.45 வரை அங்கு இருந்து விட்டுத்தான் வந்தேன்! தற்போது அரசு உத்தரவுப்படி கலெக்டர்,தாசில்தார்,RDO, BDO, Revenue inspector, VAO, தலையாரி அனைவரும் வர வேண்டும்! அனைவரும் நான் சொன்ன நேரம் வரை இருக்க வேண்டும்!! முகாம் மாதம் இருமுறை சுழல் முறையில் குறிப்பிட்ட ஊர்களில் நடக்கும்.
                         இதில் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால் அங்கேயே , மூன்று சக்கர வண்டிகள்,ஊன்றுகோல்,செயற்கைக்கால்கள்(எனக்கே ஆச்சரியம்) பதியப்பட்டு உடனடியாக வழங்கப்பட்டன. பயணர்கள் உடனடியாக ஓட்டியும் செல்கின்றனர்.
                         இத்தனைக்கும் கொஞ்சம் சதவிகிதம் குறைவாக இருந்தாலும் கூட்டிப்போட்டு உதவித்தொகை 400 ரூபாய் மாதம் உடனடியாக வழன்குகிறார்கள்!! இதற்கு அவர்கள் வி.ஏ.ஓ ,  ஆர்.ஐ, என்று அலைய வேண்டியதில்லை!! அவர்களும் முகாமில் கடைசிவரை அமர்ந்து இருப்பார்கள்!
இதில் யாருக்கும் எந்தப்பணமும் தர வேண்டியது இல்லை!!! ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனால் உண்மை.
                         மற்றபடி முன்பு போல் அலைய வேண்டியதோ பணம் தர வேண்டியதோ தற்போது இல்லை!!
                         இந்த செய்தி தமிழகமும் சில விஷயங்களில் முன்னேறித்தான் வருகிறது என்பதை தொல தூர நண்பர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதால்தான்!!!!
                         தேவா........

Friday, December 26, 2008

அமெரிக்க அரசியல்வாதியும்- தமிழக தங்கங்களும்!!!



                        சமீபத்தில் ஒரு மெயிலில்(கொஞ்சம் பழைய மெயில்தான்) படித்தேன்! ஒரு நார்வே பெண்மணி சுமார் 10-15 வருடங்களுக்கு முன், பணம் இல்லாமல் ஐரோப்பிய விமான நிலையம் ஒன்றில் நின்று கொண்டிருந்தபோது-ஒரு உயரமான வாலிபர் அவர் நிலை அறிந்து அவருக்கு பண உதவி செய்து அனுப்பிவைத்தார்.
                      
                        நீண்ட நாட்கள் கழித்து அந்தப்பெண் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் பார்த்துக்கொண்டிருந்தபோது அதே நபரை தொலைக்காட்சியில் பார்த்துப்பரவசம் அடைந்தார். நாம் அவருக்கு உதவி செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று ஆறிந்து தன் சொந்தக்காரர்கள் அனைவருக்கும் போன் செய்து இந்த நிகழ்ச்சியைக்க்கூறி அவரை ஆதரிக்க வேண்டினார்!!!
                        உங்கள் அனைவருக்கும் தெரியும் !!! அந்த இளைஞர் பாரக் ஒபாமா!!!!! என்று! இந்த நிகழ்சி மிகவும் மனதைத் தொட்டது!! அவர் இந்தியாவுக்கு உதவுவாரா போரை நிறுத்துவாரா என்பது எல்லாம் வேறு விஷயம்! ஆனால் அவருடைய மனிதத்தன்மை இந்த நிகழ்வில் போற்றத்தகுந்தது!!
                      
                      நான்கு நாட்களுக்கு முன் ஒரு அரசியல் கோஷ்டி நிதி கேட்டு என்னிடம் வந்தனர்! அவர்கள் கட்சித்தலைவர் தலைநகர் வருவதாகவும் ,பெரிய அளவில் நிதி அளிக்க வேண்டும் என்றும் கேட்டனர்!!

                        மாவட்டத்தலைவர் என்று என்னிடம் அறிமுகப்படுத்திக்கொண்டவரை இதுவரைய  நான் பார்த்ததில்லை அவருடைய பெயரைச்சொல்லி அறிமுகப்படுத்திக்கொண்டார்!பெயரைக்கேட்டவுடன் எனக்கு அவரைப்பற்றி ஞாபகம் வந்து விட்டது! ( அவர் என் சக மருத்துவரைப்பற்றி அவதூறான போஸ்டர் போட்டவர்) .
                                                                      ஓ!!! நீங்களா அது?.... போஸ்டர் எல்லாம் அடித்து ஒட்டினீர்களே?..... என்று கேட்டேன்!! இப்படிக்கேட்டவுடன் அவர் முகம் சுருங்கி விட்டது!!
                        
                        நீங்க வேற கட்சியில் இருந்தீர்களே?..... என்றேன்!  ஆமாம் நாங்கள் எல்லாம் இந்தக்கட்சிக்கு வந்துவிட்டோம் என்றார்!!.....மிக நல்லது!! ஆனால்.. சாரி, தற்போது என்னால் பணம் தர முடியாது என்று கூறி ஒரு வழியாக அனுப்பி விட்டேன்!!!

                         வெளியே செல்லும் பொது பெரிய பெரிய விளம்பரங்கள் கண்ணில் பட்டன. 
                         அதில் எனக்குத்தெரிந்த அரசியல் வாதிகள் கை கூப்பிக்கொண்டு இருந்தனர். ஆச்சரியம்! மிக குறுகிய காலத்தில் நிறைய பேர் கட்சி மாறி விட்டனர்!! 
                       அதில் இருந்த இன்னொரு நபர் என்னிடம் அவர் கட்சி பேப்பருக்கு சந்தா வாங்கி விட்டு ஏமாற்றியவர்! அவருடன் சிரித்துக்கொண்டு போஸ் கொடுத்தவர் என் இன்னொரு நண்பரிடம் பணம் கேட்டு மிரட்டி போலீசால் தேடி
மாவட்டம் மாவட்டமாக ஓடி ஒளிந்தவர்!!
                                                                                     இப்படி போஸ்டர்களைக்கண்டு மனம் வெறுத்துப்போனேன்!
                                             புதிதாக கட்சி ஆரம்பிக்கும் நடிகர்களும் , அரசியல் வாதிகளும் அவர்கள் கட்சிக்கு சேர்க்கும் நபர்களின் மீது உள்ள வழக்குகள், பிண்ணனிகளை ஆராயாமல் குற்றவாளிகளையும், ஏமாற்றுப்பேர்வழிகளையும் கட்சியில் சேர்த்துக்கொள்கின்றனர்!!!
                                                                             இது புதியவர்கள்மீது உள்ள நம்பிக்கையைத் தகர்க்கிறது!!! தமிழ்நாட்டு அரசியல் நிலைமை மிகவும் மோசமாகவே உள்ளது!!!! 
                                         தமிழகத்தின் எல்லா இடத்திலும் இதுதான் நடக்கிறது என்று நினைக்கிறேன்!
                                புதியவர்களும், படித்தவர்களும் அரசியலுக்கு வர தயங்குவதும் இத்ற்கு ஒரு காரணமா? 
                                 வலைஞர்கள் தங்கள் கருத்தை எழுதலாமே!!!