Thursday, February 26, 2009

ஊசி பீதி!!!

 

குஜராத் மாநிலத்தில் மொடாசா என்ற

பகுதியில் ஹெபடைடிஸ் பி,நோய் தாக்கியுள்ளது.

 

பயன்படுத்தப்பட்ட ஊசி,சிரிஞ்சுகளை ஒரு கும்பல்

கழுவி அடைத்து புதிய சிரிஞ்ஜ் என்று விற்பனை

செய்து வந்து உள்ளது கண்டு பிடிக்கபட்டுள்ளது..

 

இதுவே இந்நோய் மிக வேகமாகப்பரவிய காரணம்

என்று தெரிகிறது!

.

பொதுவாக தரமான பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டு

வருவதால் உபயோகப்படுத்தப்பட்ட ஊசி குழல்கள்

மறு சுழற்சி செய்யப்பட்டு, குடம், மலிவான

பொம்மைகள் செய்ய பயன்படுத்தப்படும்.

 

இதனால் இதனை வியாபாரிகள் வாங்கி விற்பது

வழக்கம்.சிராஜ் என்ற வியாபாரி பயன்படுத்தப்பட்ட

ஊசிக்குழல் வியாபாரி.

 

இவர் தினமும் ஆஸ்பத்திரிகளில் இதனை வாங்கி

பெரிய வியாபாரிகளிடம் விற்று உள்ளார்.

 

12 குழுக்கள் அமைக்கப்பட்டு அதிரடியாக நடத்திய

சோதனையில் லட்சக்கணக்கான ஊசி குழல்கள்

கண்டுபிடிக்கப்பட்டன..

 

இதன் அடிப்படையில் சபர்கந்தா பகுதியில் உள்ள 5

மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கபடவுள்ளது.

 

வியாபாரி சிராஜ் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு

உள்ளது..!!!!

 

இது ஒரு குறிப்பிட்ட குஜராத்தில் மட்டும் உள்ள

பிரச்சினை அல்ல. நாடு முழுவதும் உள்ள பிரச்சினை.

 

நாட்டின் சுகாதாரம் சுகாதாரம் என்றால் என்ன என்று

தெரியாத நகராட்சி கமிஷனர்கள் கையிலும், சுகாதாரம்

பற்றி அறிவு இல்லாத மந்திரிகள் ஆட்சியாளர்

கையிலும் இருக்கும் வரை இந்த பாதிப்புகள்

இருக்கத்தான் செய்யும்.

 

கலெக்டர்களும், மந்திரிகளும் மருத்துவக்கல்லூரிகள்

திறப்பதிலும், பத்திரிக்கைச் செய்திகளில்

இடம்பெறுவதிலும் காட்டும் ஆர்வத்தை விட்டு விட்டு

சற்று இந்த மாதிரியான விவகாரங்களில் கவனம்

செலுத்துவது நல்லது.

 

ஏனெனில் கல்யாணவீட்டில் மாப்பிள்ளையும்

இவுங்கதான்!! செத்தவீட்டில் பிணமும் இவுங்கதான்!!

20 comments:

  1. பயனுள்ள செய்தி நண்பரே!

    ReplyDelete
  2. அதுகுள்ள கருத்துரையா?
    நன்றி நண்பரே!!

    ReplyDelete
  3. \\கலெக்டர்களும், மந்திரிகளும் மருத்துவக்கல்லூரிகள்

    திறப்பதிலும், பத்திரிக்கைச் செய்திகளில்

    இடம்பெறுவதிலும் காட்டும் ஆர்வத்தை விட்டு விட்டு

    சற்று இந்த மாதிரியான விவகாரங்களில் கவனம்

    செலுத்துவது நல்லது.



    ஏனெனில் கல்யாணவீட்டில் மாப்பிள்ளையும்

    இவுங்கதான்!! செத்தவீட்டில் பிணமும் இவுங்கதான்!! \\

    சவுக்கடி ...

    ஆனாலும் உறைக்காது

    ReplyDelete
  4. வாங்க ஜமால்!
    நான் சொல்வ்து சரிதானே?

    ReplyDelete
  5. ஊசிகளை நசுக்கிக் குப்பையில் கொட்டவேண்டும்.... நம்மாளுங்க எல்லாம் தெரிஞ்சும் பண்றாய்ங்க பாருங்க!!

    ReplyDelete
  6. //நாட்டின் சுகாதாரம் சுகாதாரம் என்றால் என்ன என்று

    தெரியாத நகராட்சி கமிஷனர்கள் கையிலும், சுகாதாரம்

    பற்றி அறிவு இல்லாத மந்திரிகள் ஆட்சியாளர்

    கையிலும் இருக்கும் வரை இந்த பாதிப்புகள்

    இருக்கத்தான் செய்யும்.
    //

    மாற்று வழியை மக்கள் தான் யோசிக்க வேண்டும்.

    ReplyDelete
  7. \\ thevanmayam கூறியது...

    வாங்க ஜமால்!
    நான் சொல்வ்து சரிதானே?\\

    மிகச்சரியே!

    ReplyDelete
  8. ஊசிகளை நசுக்கிக் குப்பையில் கொட்டவேண்டும்.... நம்மாளுங்க எல்லாம் தெரிஞ்சும் பண்றாய்ங்க பாருங்க!!///

    தனித்தனியாகப் பிரித்து தனி வழி முறைகளில் அவற்றை சுத்திகரிக்கவேண்டும்!

    ReplyDelete
  9. //நாட்டின் சுகாதாரம் சுகாதாரம் என்றால் என்ன என்று

    தெரியாத நகராட்சி கமிஷனர்கள் கையிலும், சுகாதாரம்

    பற்றி அறிவு இல்லாத மந்திரிகள் ஆட்சியாளர்

    கையிலும் இருக்கும் வரை இந்த பாதிப்புகள்

    இருக்கத்தான் செய்யும்.
    //

    மாற்று வழியை மக்கள் தான் யோசிக்க வேண்டும்.///

    சரிதான்.. இதுதான் மக்களாட்சி ஆச்சே!!

    ReplyDelete
  10. //சுகாதாரம்
    பற்றி அறிவு இல்லாத மந்திரிகள் ஆட்சியாளர்
    கையிலும் இருக்கும் வரை இந்த பாதிப்புகள்
    இருக்கத்தான் செய்யும்.//

    அந்த மாநில சுகாதார அமைச்சர் எப்படியோ தெரியவில்லை... ஆனால் மத்திய அமைச்சர் மருத்துவர் தானே!!!

    அது போன்ற ஊசிகளுக்கு பெயரே Disposable Syringes and needles... உபயோகப்படுத்தி விட்டு களையப்பட வேண்டியவை. இந்த சம்பவத்தில் அவை களையப்பட்டிருக்கின்றன ஆனால் முறையாக அல்ல... சில கயவர்களால் சாதாரண வியாபாரிகளிடம் சேர்க்கப்பட்டிருக்கின்றன. தமிழகத்திலும் இந்த கொடுமைகள் உண்டு.

    மருத்துவமனை ஊழியர்கள் அறியாமல் இந்த தவறு நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை.மருத்துவமனை கழிவுகள் மருத்துவமனை வளாகத்தை விட்டு வெளியே போனதே தவறு. மறுசுழற்சி செய்ய பெரும்பாலான அரசு மருத்துவமனைகளிலேயே வசதிகள் உண்டு.

    கழிவுகளுக்கென்று தனியே ஏடுகள் உண்டு...அவை இங்கு பின்பற்றப்படவில்லை என்றே தோன்றுகிறது.

    திடீர் சோதனைகள் மருத்துவமனைகளில் இப்போதெல்லாம் குறைவு என தோன்றுகிறது.Inspection களும்,தண்டனைகளும் கடுமையாக்கப்பட வேண்டும்.

    வருமுன் காப்போம் என்கிறார்கள் அரசு மருத்துவமனைகளிலேயே.... ஆனால் இங்கு வியாதி வந்த பின்னர் தான் சோதனையே இடுகிறார்கள்...

    இப்படியே போனால் 2020 ல் வல்லரசு என்று கலாம் கண்ட கனவு கனவாகவே இருக்கும்.

    தொடருமானால் 2100 வருடமானாலும் இந்தியா இந்தியாவாகவே இருக்கும்

    ReplyDelete
  11. அட என்னங்க இது???
    இப்பிடிச் செய்வதனால் எத்தனையோ பேர் நோயாளி ஆவாங்கன்னு தெரிஞ்சுமா இப்பிடியெல்லாம் செய்றாங்க???
    இவனுகளை எல்லாம் திருத்தவே முடியாது.
    ஏன் தான் இப்பிடி செய்றவங்களோட புத்தி இவ்வளவு கேவலமா போகுதோ???

    ReplyDelete
  12. //களையப்பட்டிருக்கின்றன ஆனால் முறையாக அல்ல... சில கயவர்களால் சாதாரண வியாபாரிகளிடம் சேர்க்கப்பட்டிருக்கின்றன//

    இது மிகவும் ஆபத்தான விஷயம்

    உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது

    இதற்காகத்தான் needle destroyer வழங்குகிறார்கள்

    ReplyDelete
  13. நோயைத்தீர்க்கும் ஊசிமூலமாகவே நோயை பரப்புவது என்பதில் நம்மாளுங்க நல்லா செயல்படுவாங்க‌

    எல்லாம் பணத்தாசை, அடுத்தவன் நலம் விரும்பாதவன்

    ReplyDelete
  14. இதுக்கு காரணமானவங்களை விஷ ஊசி போட்டு கொல்லனும்

    ReplyDelete
  15. ஊசிகள் மட்டும் அல்ல, பிரபல பிராண்டுகளின் பிளாஸ்டிக் கவர்கள்,அட்டைப்பெட்டிகள்,சோப் உறைகள்... இப்படி எல்லாமே போலித்தயாரிப்பாளர்களால் பயன்படுத்தப்படுகின்றனவாம். யாவற்றையும் பயன்படுத்த முடியாத வைகயில் சிதைத்தே கயலான்கடைக்கு போடவேண்டும். இதை படிப்பவர்கள் இனிமேலாவது எச்சரிக்கையாக இருக்கவும்!

    ReplyDelete
  16. வாங்க எட்வின்!
    அன்புமணி புகை பிடிக்கக்கூடாது என்று புதிய சட்டம் கொண்டு வந்தார்.
    அவர் நேரடியாக ஊசிவரை பார்க்க முடியாது.! அதனை மாநில அதிகாரிகள்தான் கவனிக்க வேண்டும்! இங்கு முறையான செயல்பாடுகள் இல்லை!! அரசு இன்னும் ஆஸ்பத்திரிக்கழிவுகளை அகற்றுவதில் நிறைய சிக்கல்களை தீர்க்கவில்லை!!

    ReplyDelete
  17. அட என்னங்க இது???
    இப்பிடிச் செய்வதனால் எத்தனையோ பேர் நோயாளி ஆவாங்கன்னு தெரிஞ்சுமா இப்பிடியெல்லாம் செய்றாங்க???
    இவனுகளை எல்லாம் திருத்தவே முடியாது.
    ஏன் தான் இப்பிடி செய்றவங்களோட புத்தி இவ்வளவு கேவலமா போகுதோ???///

    என்ன செய்வது வேத்தியன்! மனமாற்றம் தேவை..

    ReplyDelete
  18. //களையப்பட்டிருக்கின்றன ஆனால் முறையாக அல்ல... சில கயவர்களால் சாதாரண வியாபாரிகளிடம் சேர்க்கப்பட்டிருக்கின்றன//

    இது மிகவும் ஆபத்தான விஷயம்

    உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது

    இதற்காகத்தான் needle destroyer வழங்குகிறார்கள்///

    குழல்களைக்கூட கட் பண்ணித்தான் போடவேண்டும் என்றும் சட்டமுள்ளது!!

    ReplyDelete
  19. இதுக்கு காரணமானவங்களை விஷ ஊசி போட்டு கொல்லனும்///

    பயங்கரமான தண்டனையாகவுள்ளதே!!

    ReplyDelete
  20. ஊசிகள் மட்டும் அல்ல, பிரபல பிராண்டுகளின் பிளாஸ்டிக் கவர்கள்,அட்டைப்பெட்டிகள்,சோப் உறைகள்... இப்படி எல்லாமே போலித்தயாரிப்பாளர்களால் பயன்படுத்தப்படுகின்றனவாம். யாவற்றையும் பயன்படுத்த முடியாத வைகயில் சிதைத்தே கயலான்கடைக்கு போடவேண்டும். இதை படிப்பவர்கள் இனிமேலாவது எச்சரிக்கையாக இருக்கவும்!//

    ஆமாம் அன்புமணி!!சட்டங்கள் கடுமையாக்கப்படவேண்டும்!!

    ReplyDelete