Saturday, February 28, 2009

”ஸ்லம் டாக்” ஏழை சிறுவர்களை ஏமாற்றினேனா?-டானி பாய்ல்!

Film still for Mumbai rising

டானி பாய்ல் , ஸ்லம் டாக் படத்தின்

இயக்குனருக்கு

நான் ஸ்லம் டாக் வெட்கக்கேடு என்று எழுதிய

பதிவு தெரிந்து விட்டது!!!

 

அவர் மும்பாய் வாழ் குடிசை சிறுவர்களை

வறுமையிலிருந்து வெளிக்கொணர ஒரு நிதியமைப்பு

ஏற்பாடு செய்கிறார்!!

 

இதற்காக அடுத்தவாரம் லண்டனில்

இதில் ஆர்வமுள்ளவர்களின் கூட்டம்

ஒன்றைக்கூட்டியிருக்கிறார்..அதில் பணம் எவ்வளவு

போடுவது, எப்படி அதை சரியான

முறையில் வீணாகாமல் உபயோகிப்பது போன்ற

விசயங்கள் தீர்மானிப்பார்கள்!

கீழே அவர் சொன்ன முத்தான பாராட்டத்தக்க வரிகள்! 

"We want to set it up as soon as possible. What absolutely mustn't happen is that the money disappears or people think this is a PR stunt," Boyle said.

 

பாயிலும் கோல்சனும்(தயாரிப்பாளர்களில் ஒருவர்)

ஏழைச் சிறுவர்களைப் பயன்படுத்தி படம் எடுத்து

பணம் சம்பாரிக்கிறார்கள் என்ற குரல்கள் பல

பக்கங்களிலிருந்தும் எழுந்ததையொட்டி தங்களின்

இந்த திட்டத்தை வெளியிட்டனர்!

டைம் பத்திரிக்கையும் இவர்களை

மேற்சொன்னதுபோல் விமரிசித்து இருந்தது!

 

ஆயினும் இந்த விமரிசனங்களால் தாங்கள் இந்த

முடிவு எடுக்கவில்லை என்றும் இந்தப்படத்தின் அபார

வெற்றியில் கிடைத்த அதிகமான பணத்தில் இந்த

மிகச் சிறந்த நகருக்கு ஏதாவது செய்யவேண்டும்

என்ற எண்ணமே காரணம் என்றும் மனம் நெகிழ்ந்து

கூறியுள்ளார்.

 

தங்க க்ளோப் விருது பெற்றவுடனே தாங்கள் இந்த

முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறியுள்ளார்..

 

ஒரு (இளைஞர்) நடிகர்களுக்குக் கொடுப்பது போல்

மூன்று மடங்கு வருடச்சம்பளம் அசாருக்கும்,

ரூபினாவுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது!என்றார்!!

 

அதாவது ஒரு மாதம் நடித்ததற்கு ஒரு வருட

சம்பளம் தரப்பட்டு உள்ளதாம்!

 

ஆச்சரியம்தான்!!

 

இதன் பிறகு அவர்களுக்கு 18 வயது ஆகும்

போது,பள்ளிப்படிப்பை முடித்தால் அவர்களுக்கு பெரிய

தொகை கிடைப்பது போன்ற தனி ஏற்பாடும்

செய்வதாகக் கூறியுள்ளார்!!!

 

இந்த அருமையான 

மனிதனை  தலைதாழ்த்தி

வணங்குகிறேன்.

16 comments:

  1. டானி பாய்ல் , ஸ்லம் டாக் படத்தின் இயக்குனருக்கு நான் ஸ்லம் டாக் வெட்கக்கேடு என்று எழுதிய பதிவு தெரிந்து விட்டது!!!\\

    அப்படியா

    ReplyDelete
  2. நீங்க யுனிவர்ஸல் பிகர் ஆயிட்டிங்க

    வாழ்த்துகள்

    ReplyDelete
  3. \\பாயிலும் கோல்சனும்(தயாரிப்பாளர்களில் ஒருவர்) ஏழைச் சிறுவர்களைப் பயன்படுத்தி படம் எடுத்து பணம் சம்பாரிக்கிறார்கள் என்ற குரல்கள் பல பக்கங்களிலிருந்தும் எழுந்ததையொட்டி தங்களின் இந்த திட்டத்தை வெளியிட்டனர்!\\

    எப்படியோ நல்லது நடந்தா சரிதான்

    ReplyDelete
  4. வரவேற்கத்தகுந்த நல்ல விஷயம்

    ReplyDelete
  5. நல்ல செய்தி!..

    ReplyDelete
  6. //டானி பாய்ல் , ஸ்லம் டாக் படத்தின் இயக்குனருக்கு நான் ஸ்லம் டாக் வெட்கக்கேடு என்று எழுதிய பதிவு தெரிந்து விட்டது!!!//


    அன்னிக்கு அவரு கூட பேசிக்கிட்டு இருந்தப்ப நான் தான் இதே மாதிரி பதிவு போட்டு இருக்கார்னு சொன்னேன்..

    ReplyDelete
  7. டானி பாய்ல் , ஸ்லம் டாக் படத்தின் இயக்குனருக்கு நான் ஸ்லம் டாக் வெட்கக்கேடு என்று எழுதிய பதிவு தெரிந்து விட்டது!!!\\

    ஆமா ஜமால்!
    இஃகி இஃகி..

    ReplyDelete
  8. \\பாயிலும் கோல்சனும்(தயாரிப்பாளர்களில் ஒருவர்) ஏழைச் சிறுவர்களைப் பயன்படுத்தி படம் எடுத்து பணம் சம்பாரிக்கிறார்கள் என்ற குரல்கள் பல பக்கங்களிலிருந்தும் எழுந்ததையொட்டி தங்களின் இந்த திட்டத்தை வெளியிட்டனர்!\\

    எப்படியோ நல்லது நடந்தா சரிதான்//

    சரிதான்

    ReplyDelete
  9. நீங்க யுனிவர்ஸல் பிகர் ஆயிட்டிங்க

    வாழ்த்துகள்//

    கொடுமையப்பாருங்கப்பா!

    ReplyDelete
  10. பிளாகர் Rajeswari கூறியது...

    வரவேற்கத்தகுந்த நல்ல விஷயம்///

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. நல்ல செய்தி!..//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  12. /டானி பாய்ல் , ஸ்லம் டாக் படத்தின் இயக்குனருக்கு நான் ஸ்லம் டாக் வெட்கக்கேடு என்று எழுதிய பதிவு தெரிந்து விட்டது!!!//


    அன்னிக்கு அவரு கூட பேசிக்கிட்டு இருந்தப்ப நான் தான் இதே மாதிரி பதிவு போட்டு இருக்கார்னு சொன்னேன்..///

    அடங்கொப்புரானே! முன்னமே சொல்லப்படாதா?

    ReplyDelete
  13. ////அவர் மும்பாய் வாழ் குடிசை சிறுவர்களை வறுமையிலிருந்து வெளிக்கொணர ஒரு நிதியமைப்பு ஏற்பாடு செய்கிறார்!!///

    வரவேற்கத்தகுந்த நல்ல விஷயம்

    ReplyDelete
  14. ////அவர் மும்பாய் வாழ் குடிசை சிறுவர்களை வறுமையிலிருந்து வெளிக்கொணர ஒரு நிதியமைப்பு ஏற்பாடு செய்கிறார்!!///

    வரவேற்கத்தகுந்த நல்ல விஷயம்///

    வாங்க!
    தங்கராசா!!!
    நல்ல முயற்சி.

    ReplyDelete
  15. என்ன இவங்க இப்படி நல்லவர்களாக இருக்கிறார்கள்?

    ReplyDelete
  16. //இதன் பிறகு அவர்களுக்கு 18 வயது ஆகும்.போது,பள்ளிப்படிப்பை முடித்தால் அவர்களுக்கு பெரிய தொகை கிடைப்பது போன்ற தனி ஏற்பாடும் செய்வதாகக்
    கூறியுள்ளார்!//

    Dev Patel had mentioned about it in Ellen DeGeneres's talk show somewhere around January.
    http://www.youtube.com/watch?v=poJNyKlg_vM

    ReplyDelete