Wednesday, February 25, 2009

இளையராஜா ஏமாற்றப்பட்டாரா?

.

ரஹ்மான் தனது முதல் தேசிய விருதினைப் பெற்றதன் பின்னணிக் கதை ஒன்றை, நேற்று ஒரு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சொன்னார் பாலு மகேந்திரா.

17 ஆண்டுகளுக்கு முன் நடந்த கதை இது. இத்தனை நாட்கள் கழித்து நேற்றுதான் அதை வெளிப்படுத்தினார். .

இளையராஜா என்ற மாபெரும் கலைஞனை இதைவிட பெரிதாக அவமானப்படுத்திவிட முடியுமா என்பது தெரியவில்லை.

இந்தச் சம்பவம் நடந்த போது பாலுமகேந்திராதான் தேசிய விருதுக் குழு தலைவரும் கூட. அப்போது சிறந்த இசைக்குரிய பிரிவில் இளையராஜா இசையில் கமல் நடித்த தேவர் மகனும், ரஹ்மான் முதன்முதலில் இசையமைத்த ரோஜாவும் போட்டியிட்டன.

இதில் ரோஜாவின் இசைக்கு விருது கொடுத்தார்கள். ஆனால் அப்படி விருது தரும்முன் நடந்த அரசியலை நேற்றுதான் பாலுமகேந்திரா வெளிப்படுத்தினார். அதாவது ரஹ்மான் உயர்வுக்கு நானும் முக்கியக் காரணமாக இருந்தேன் என்பதை நிலை நிறுத்த அப்படிச்சொன்னாரோ என்னமோ…

சிறந்த இசைக்கான விருது பெற இசையைத் தாண்டி வேறு என்னவெல்லாம் தகுதியாக உள்ளன பாருங்கள்!

எது சிறந்த இசை?

ஒரு சமூகத்தின், பிராந்தியத்தின் உணர்வுகளைப் பிரதிபலிப்பலிப்பதே நல்ல இசை. அது எந்த வயதுக்காரனிடமிருந்து வந்திருந்தால் என்ன?

அந்த வகையில் தேவர் மகன் இசை, வேறு யாருடைய அல்லது எந்தப் படத்தினுடைய இசையுடனும் ஒப்பிட முடியாதது. அத்தனைச் சிறப்பு அந்தப் படத்தின் பின்னணி இசைக்கு உண்டு. தேவர் மகனில் ராஜாவின் பின்னணி இசையை இப்போது கேட்டாலும் கண்முன் படக் காட்சிகள் அப்படியே அழகழகாக விரியும்.

ஆனால் ரோஜாவைப் பொறுத்தவரை, பின்னணி இசை அத்தனைப் பிரமாதமில்லை. பாடல்களுக்குத்தான் பெரிய வரவேற்பு.

ஆனால் அந்தப் படத்துக்குத்தான் விருது கொடுக்க சிபாரிசு செய்துள்ளார் பாலுமகேந்திரா. காரணம், ‘சின்ன பையன் என்பதால் பரிந்துரைத்தேன்’ என்று இப்போது கூறியுள்ளார்.

இசையின் ஜீவன், ஒரு படத்துக்கு எப்படியெல்லாம் அந்த இசை உயிரூட்டுகிறது? அந்த இசை படம் பார்ப்பவருக்குள் ஏற்படுத்தும் அதிர்வுகள் என்ன… என்பதைப் பார்த்துதான் ஒரு படத்துக்கு விருது தரப்பட வேண்டுமே தவிர, இவர் இளைஞர், அவருக்கு விருது கொடுத்துவிடலாம் என்று கொடுப்பதில் என்ன லாஜிக் இருக்கிறது? அதுவும் விருதுக் குழுவின் தலைவரே இதைச் செய்திருப்பது மிகவும்  அதிர்ச்சியைத் தந்தது.

இந்த தேசிய விருதினை தவற விட்டதால் ராஜாவின் மதிப்போ தரமோ குறைந்துவிடப் போவதில்லை. ஆனால் பெற்ற விருதுகள் மற்றும் வாங்கும் சம்பளத்தை மட்டுமே அடிப்படையாக வைத்து ஒரு இசைக் கலைஞரை மதிப்பிடுபவர்கள்தானே இங்கு அதிகம்? ரஹ்மான் பெற்ற இரண்டு ஆஸ்கர்கள்தானே அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட வைத்துள்ளது நம்மையெலலாம்.

அப்புறம் எதற்கு போட்டி, ஓட்டு?  இசையமைப்பாளர்களின் வயதை மட்டும் அடிப்படையாகக் கொண்டு விருதுகளை வழங்கிவிடலாமே! அப்படியெனில் இத்தனை ஆண்டுகளாக திறமைகள் ஓரங்கட்டப்பட்டு, லாபி அல்லது தனி நபர்களது விருப்பத்தின் அடிப்படையில்தான் விருதுகளை வழங்குகிறார்களா?

தேவர்  மகன் என்ற அந்த நல்ல படத்துக்கு, பல புதிய பரிமாணங்களைத் தந்தது ராஜாவின் இசை. தென் மாவட்ட மக்களின் ஆன்மாவை அப்படியெ வெளிக்கொணர்ந்த காட்சியமைப்புகள் நிறைந்த அந்தப்படத்தை, ராஜாவின் இசை தவிர்த்துப் பார்த்தால் ரசிக்க முடியாது. தேவர் மகனோடு ஒப்பிடுகையில் ரோஜாவின் இசை மிகச் சாதாரணமான ஒன்று (அந்த விருது தனக்கு மகிழ்ச்சியைவிட அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையுமே ஏற்படுத்தியது என ரஹ்மான் கூறியுள்ளதை நினைவுகூரத்தக்கது. )

ஆனால் அந்தப் படம் சிறந்த இசைக்கான தேசிய விருது பெறுவதை, ரஹ்மானுக்காக தடுத்திருக்கிறார் பாலுமகேந்திரா.

என்னதான் செய்தார் அப்படி?

இதோ அவரே நேற்று வெளியிட்ட ரகசியம்!

இந்திரவிழா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா.

பாலுமகேந்திரா மைக்கப் பிடித்தார்.

“நானும் ரஹ்மானும் இணைந்து பணியாற்றாவிட்டாலும், ரஹ்மானின் ஆரம்ப கட்ட வளர்ச்சிக்கு என்னாலான உதவியைச் செய்திருக்கிறேன் என்ற உரிமையில் ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். இதுவரை எங்கும் இது பற்றி நான் சொன்னதில்லை.

ரஹ்மான் இசையமைத்த ரோஜா படமும், இளையராஜா இசையமைத்த தேவர் மகனும் ஒரே நேரத்தில் மத்திய அரசின் விருதுக் கமிட்டிக்கு வந்தன. நான்தான் விருதுக் குழுவின் தலைவர் அப்போது. இரண்டு படங்களும் சிறந்த இசைக்கான பிரிவில் தலா 7 ஓட்டுக்கள் வாங்கி சம் நிலையில் இருந்தன. நான் என்னுடைய ஓட்டைப் போடாமல் ஒதுங்கி இருக்க முடிவு செய்திருந்தேன். ஆனால் கடைசியில் நான் ஓட்டுப் போட்டே தீர வேண்டிய நிர்ப்பந்தம்.

ஒரு பக்கம் என் நண்பர் இளையராஜா. மறுபக்கம், இருபத்தைந்து வயது மட்டுமே நிரம்பிய ஒரு இளைஞன். ஆனாலும் இளையராஜா என்ற இசை மா மலையை எதிர்த்து ஒரு சிறுவன் நிற்கிறானே, அவனுக்கு இப்போது கிடைக்கும் தேசிய விருது இன்னும் நம்பிக்கையையும், உற்சாகத்தையும் அளிக்குமே என்று நினைத்தேன்.

தலைவர் என்ற முறையிலேயும் உறுப்பினர் என்ற முறையிலும் எனக்கு இருந்த இரண்டு ஓட்டுகளையும் ரஹ்மானுக்கே போட்டு ஜெயிக்க வைத்தேன். அந்த ஆண்டின் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது ரஹ்மானுக்குக் கிடைத்தது. அதன் பிறகு நடந்ததெல்லாம் உங்களுக்குத் தெரியும்…”, என்றார் பாலு மகேந்திரா.

இதை என்னவென்று சொல்வது?

ரஹ்மானுக்கு முதல்முறையாக இந்தியாவின் மிகச் சிறந்த இசையமைப்பாளர் விருது கொடுத்த போதே இந்த உண்மையைச் சொல்லியிருக்கலாமே…!

.ஆனால் அவர் முதல் தேசிய விருது பெறுவதற்காக, தமிழகத்தின் இன்னொரு மகத்தான கலைஞனை பாலுமகேந்திரா போன்றவர்கள் ஏமாற்றியிருக்கிறார்கள் .

29 comments:

  1. //தலைவர் என்ற முறையிலேயும் உறுப்பினர் என்ற முறையிலும் எனக்கு இருந்த இரண்டு ஓட்டுகளையும் ரஹ்மானுக்கே போட்டு ஜெயிக்க வைத்தேன்//


    ஓட்டு போட்டு இருக்கிறார். அதற்கான காரணத்தைச் சொல்லியிருக்கிறார். அந்த நேரத்தில் இளையராஜாவுடன் மனத்தாபம் கூட இருந்திருக்கலாம். மற்றபடி இவரால்தான் ரகுமான வளர்ந்தார். ஆஸ்கர் வாங்கினார் என்று சொல்வதெல்லா, கொஞ்சம் ஓவர்.

    இவரைவிட ரகுமானின் வளர்ச்சியில் எங்கள் பங்கு அதிகம். கல்லூரியில் படிக்கும்காலகட்டத்தில் ரகுமானின் பாடல்களை முணுமுணுப்போம். பாடிக்கொண்டு சுற்றுவோம். நாங்கள்கூட சொல்லலாம். எங்களால்தான் ரகுமான் வளர்ந்தார். நாங்கள் இல்லையேல் ரகுமான் இல்லை என்று.

    ( நாங்கள் அந்தநேரத்தில் வந்த தெலுங்கு டப்பிங் பாடல்களைக் கூட விட்டுவைத்ததில்லை)

    ReplyDelete
  2. Balu Mahendra is a talented man, but in character he is very cheap. If he's really a gentleman, he should have revealed this at that time itself. Now, he's disclosing this story for gaining some cheap publicity. These type of guys should be chucked out.

    ReplyDelete
  3. இவரைவிட ரகுமானின் வளர்ச்சியில் எங்கள் பங்கு அதிகம். கல்லூரியில் படிக்கும்காலகட்டத்தில் ரகுமானின் பாடல்களை முணுமுணுப்போம். பாடிக்கொண்டு சுற்றுவோம். நாங்கள்கூட சொல்லலாம். எங்களால்தான் ரகுமான் வளர்ந்தார். நாங்கள் இல்லையேல் ரகுமான் இல்லை என்று.///

    சரிதான் சுரேஷ், திறமை இல்லாமல் ஒருவர் புகழ் பெறமுடியாது!1

    ReplyDelete
  4. Balu Mahendra is a talented man, but in character he is very cheap. If he's really a gentleman, he should have revealed this at that time itself. Now, he's disclosing this story for gaining some cheap publicity. These type of guys should be chucked out.

    What u are telling is right..

    ReplyDelete
  5. \\ரஹ்மானுக்கு முதல்முறையாக இந்தியாவின் மிகச் சிறந்த இசையமைப்பாளர் விருது கொடுத்த போதே இந்த உண்மையைச் சொல்லியிருக்கலாமே…!

    .ஆனால் அவர் முதல் தேசிய விருது பெறுவதற்காக, தமிழகத்தின் இன்னொரு மகத்தான கலைஞனை பாலுமகேந்திரா போன்றவர்கள் ஏமாற்றியிருக்கிறார்கள் .\\

    அப்டியா ...

    ReplyDelete
  6. ரஹ்மானுக்கு முதல்முறையாக இந்தியாவின் மிகச் சிறந்த இசையமைப்பாளர் விருது கொடுத்த போதே இந்த உண்மையைச் சொல்லியிருக்கலாமே…!

    .ஆனால் அவர் முதல் தேசிய விருது பெறுவதற்காக, தமிழகத்தின் இன்னொரு மகத்தான கலைஞனை பாலுமகேந்திரா போன்றவர்கள் ஏமாற்றியிருக்கிறார்கள் .\\

    அப்டியா ...///

    ஆமாம் !!!

    ReplyDelete
  7. அடடா....இன்னும் எத்தனை பேர் கிளம்ப போறாங்க...

    நான் தான் ரஹ்மானுக்கு துணி தைச்சு குடுத்தேன்...ரஹ்மான் சாப்பிடுற அரிசி எங்க வயல்ல தன் விளயுதுன்னு....

    நம்ம மக்கள் என்னைக்கு தான் திருந்துவாங்களோ.....யப்பா....இப்போவே கண்ணைக் கட்டுதே

    ReplyDelete
  8. வழக்கொழிந்த தமிழ் சொற்கள் தொடர் பதிவு போட்டாச்சு..வந்து பாருங்க

    ReplyDelete
  9. http://www.envazhi.com/?p=4327


    இந்த பதிவை யார் முதலில் எழுதியது ???

    நீங்கள் தானா ?

    ReplyDelete
  10. அடடா....இன்னும் எத்தனை பேர் கிளம்ப போறாங்க...

    நான் தான் ரஹ்மானுக்கு துணி தைச்சு குடுத்தேன்...ரஹ்மான் சாப்பிடுற அரிசி எங்க வயல்ல தன் விளயுதுன்னு....

    நம்ம மக்கள் என்னைக்கு தான் திருந்துவாங்களோ.....யப்பா....இப்போவே கண்ணைக் கட்டுதே///

    பாப்புலர்
    ஆனா இப்படித்தான்

    ReplyDelete
  11. வழக்கொழிந்த தமிழ் சொற்கள் தொடர் பதிவு போட்டாச்சு..வந்து பாருங்க///

    varukiren

    ReplyDelete
  12. சிவகுமாருக்கும் இது போல நேர்ந்திருக்கிறது.சிந்துபைரவி படத்திற்காக சிறந்த நடிகர் விருதிற்கு..இவரும்..மற்றுமொரு ஹிந்தி நடிகருக்கும் சம ஓட்டுகள்.அப்படத்தில் நடித்த சுஹாசினி,பாடகி சித்ரா
    ஆகியவர்கள் விருதிற்கு தேர்ந்தெடுக்கப் பட்டுவிட்டனர் என்பதாலும்...விருது கமிட்டியின் தலைவர் வட இந்தியராய் இருந்ததாலும்...தன் ஓட்டை ஹிந்தி நடிகருக்குப் போட்டுவிட்டார்.சிவகுமார் விருதை இழந்தார்.

    ReplyDelete
  13. பாலுமகேந்திரா எதுவும் புதுப்படம் எடுக்கிறரா? என்ன இருந்தாலும் ராஜா ராஜாதான்! அதில் மாற்றுக்கருத்துக்கு இடமே இல்லை. ரகுமானின் இசைவழி தனி! ஆஸ்கார் விருது பெற்ற அவருக்கு எனது வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. சூரியனை கை மறைப்பார் இல் .

    ReplyDelete
  15. இளையராஜா தன் ஆரம்பக்கட்டத்தில் இசையமைத்த பெரும்பாலான பாடல்கள் காலத்தால் அழிக்கமுடியாத அற்புதமான பாடல்கள். ரஹ்மான் ஆஸ்கார் விருது வாங்கியது நமக்கு பெருமை என்றாலும் இளையராஜாவுடன் அவரை ஒப்பிட இயலாது.

    ReplyDelete
  16. சிவகுமாருக்கும் இது போல நேர்ந்திருக்கிறது.சிந்துபைரவி படத்திற்காக சிறந்த நடிகர் விருதிற்கு..இவரும்..மற்றுமொரு ஹிந்தி நடிகருக்கும் சம ஓட்டுகள்.அப்படத்தில் நடித்த சுஹாசினி,பாடகி சித்ரா
    ஆகியவர்கள் விருதிற்கு தேர்ந்தெடுக்கப் பட்டுவிட்டனர் என்பதாலும்...விருது கமிட்டியின் தலைவர் வட இந்தியராய் இருந்ததாலும்...தன் ஓட்டை ஹிந்தி நடிகருக்குப் போட்டுவிட்டார்.சிவகுமார் விருதை இழந்தார்.//

    ஆமாங்க. நல்லா ஞாபகம் வ்ச்சிருக்கீங்க...

    ReplyDelete
  17. ம்..
    என்ன சொல்வதென்றே புரியவில்லை...
    தேவா சார், இப்பிடி எல்லாம் சொன்னா ரஹ்மான் வென்றதுக்கு காரணம் பாலுமகேந்திரா தான்னு யாராவது நம்பிடுவாங்களா???
    எப்பிடின்னாலும் பாலுமாகேந்திரா செய்தது தவறு.தேவர் மகனுக்கு தான் கிடைத்திருக்க வேண்டும்...
    ஆனாலும் ரஹ்மான் திறமைசாலி.
    யாரையும் யாரோடும் ஒப்பிட முடியாது. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு திறமை உண்டு...
    இது தான் என் கருத்து.
    நீங்கள் சொல்வது சரிதான்...

    ReplyDelete
  18. பாலுமகேந்திரா எதுவும் புதுப்படம் எடுக்கிறரா? என்ன இருந்தாலும் ராஜா ராஜாதான்! அதில் மாற்றுக்கருத்துக்கு இடமே இல்லை. ரகுமானின் இசைவழி தனி! ஆஸ்கார் விருது பெற்ற அவருக்கு எனது வாழ்த்துக்கள்!///

    உண்மைதான்!!

    ReplyDelete
  19. சூரியனை கை மறைப்பார் இல் ///

    உண்மைதான் நண்பரே!!!

    ReplyDelete
  20. அறிஞர் அண்ணா அவர்களின் கட்டாயத்தின் பேரில்தான் பராசக்தியில் சிவாஜி கணேசன் வேண்டா வெறுப்பாக பெருமாள் அவர்களால் ஒத்துக் கொள்ளப் பட்டார்.ஆனால் அண்ணா அவர்களிடம் நீங்கள்தான் சிவாஜியை உருவாக்கினீர்கள் என்ற பொழுது,இல்லை அவர் திறமை தான் அவரை உருவாக்கியது.நான் இல்லாவிட்டால் இன்னொருவர் அந்தத்
    திறமையைக் கண்டிருப்பார் என்றாராம்.

    ReplyDelete
  21. இளையராஜா தன் ஆரம்பக்கட்டத்தில் இசையமைத்த பெரும்பாலான பாடல்கள் காலத்தால் அழிக்கமுடியாத அற்புதமான பாடல்கள். ரஹ்மான் ஆஸ்கார் விருது வாங்கியது நமக்கு பெருமை என்றாலும் இளையராஜாவுடன் அவரை ஒப்பிட இயலாது.///

    உங்கள் கூற்று மிகச்சரி

    ReplyDelete
  22. என்ன சொல்வதென்றே புரியவில்லை...
    தேவா சார், இப்பிடி எல்லாம் சொன்னா ரஹ்மான் வென்றதுக்கு காரணம் பாலுமகேந்திரா தான்னு யாராவது நம்பிடுவாங்களா???
    எப்பிடின்னாலும் பாலுமாகேந்திராசெய்தது தவறு.தேவர் மகனுக்கு தான் கிடைத்திருக்க வேண்டும்...
    ஆனாலும் ரஹ்மான் திறமைசாலி.
    யாரையும் யாரோடும் ஒப்பிட முடியாது. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு திறமை உண்டு...
    இது தான் என் கருத்து.
    நீங்கள் சொல்வது சரிதான்...///

    பாலுமாகேந்திரா செய்தது தவறுதான்,

    ReplyDelete
  23. இருவரும் மகத்தான கலைஞர்கள்
    ராஜா தென்றாலாய் தாலாட்டுவார், இது எப்பவுமே சீராக அடிக்கும் காற்று
    ரகுமான் புயாலாய் கிளப்புவார், இது எப்பவுமே இசையில் மாற்றத்தை தருவார்

    எல்லோரும் போற்றும் அந்த மகான் கூட ரகுமான் வளர்ந்து வரும்போது அவரை வாழ்த்தாமல் என்னை மாதிரி இசை கொடுக்க‌முடியுமா என்று சவால் விட்டவர்..


    பாலுமகேந்திரா கருத்துப்பற்றி சோல்லுவதற்கு ஒன்றுமில்லை... இருந்தாலும் மேஸ்ட்ரோவை ஒப்பிட்டு அவர் சாதனை யாராலும் வெல்ல முடியாது என்று நினைத்து இவரை வளர்த்து விட ஏதுவாக செய்திருக்கலாம்.

    எது நடந்ததோ அது நன்றாகவே நடக்கட்டும்

    ReplyDelete
  24. காலம் போகப்போகத்தான் பாலுமகேந்திரா கனக்கக் கதையளக்கிறார். இன்னும் எத்தனையை அவிழ்க்கப்போகிறாரோ தெரியாது ?
    சாந்தி

    ReplyDelete
  25. தமிழ் Says:
    February 25th, 2009 at 10:10 pm

    ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பார்வை.
    நீங்கள் ராஜா விசிறி என்பதால் இந்தப் பதிவு உங்களுக்கு அவசியப்படலாம்.

    ஆனால், பாலுமகேந்திரா சொன்னதில் எனக்குப் புரிந்தது: தேவர்மகனும், ரோஜா இசையும் தலா ஏழு வோட்டுகள் வாங்கி சமமாகத்தான் இருந்தன. நட்பை மீறி, ஒரு புதுதளிருக்கு நீருற்ற நினைத்த ஒரு படைப்பாளியின் படைப்பாபிமானமாக பாலுவின் செயல்.

    நிஜத்தில், ராஜாவை ரகுமானும் ரகுமானை ராஜாவும் அவ்வப்போது விஞ்சிக்கொண்டுதான் இருக்கின்றனர்/

    ReplyDelete
  26. He has clearly said, there was a split decision. 7-7 votes and as a senior member ha has casted his vote for a budding talent. awards are given for encouragement. ippadi ellam pesi ethuku Illayarajavai asinga paduthanum.. i ddi not mean Balu Mahendra ... i am saying about you..
    what are u trying to say...ARRahman did not deserve it.. for Roja... if anyone sayd when they see the scene when the flag is burned and thery did not have gossepimples.. then they may be unhuman like you.

    ReplyDelete
  27. திரு தேவன்மயம்...

    என்வழி.காம் தளத்திலிருந்து செய்திக்கட்டுரை (http://www.envazhi.com/?p=4327) ஒன்றை தாங்கள் அப்படியே வரிக்கு வரி, படங்கள் கூட மாறாமல் எடுத்தாண்டிருக்கிறீர்கள். மகிழ்ச்சி. எங்கள் தளம் தங்களையும் சேர்ந்திருப்பதில் சந்தோஷப்படுறோம்.

    இப்படி அடுத்தவர் பதிவுகளை எடுத்தாளும்போது குறைந்தபட்சம் அந்த செய்திக் கட்டுரையை எழுதியவரின் பெயர் மற்றும் தளத்தின் முகவரியைத் தருவது எழுத்துலக நாகரீகம். தங்களுக்கும் தெரிந்திருக்கும் என நம்புகிறோம்.

    சக பதிவராக அடுத்தவர் மன நிலையைப் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறோம்.

    -Admin
    Envazhi

    ReplyDelete
  28. இதில் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் பாலு மகேந்திராவை தவிர

    ரஹ்மானுக்கு 7 பேரும்
    இளையராஜாவிற்கு 7 பேரும்

    ஓட்டு போட்டுள்ளனர்

    என்னவோ 14-0 என்பதை பாலு மாற்றினார் என்பது போல் நீங்கள் எழுதியிருப்பது சரியாக தோன்றவில்லை

    ReplyDelete
  29. Nilavum Ammavum சொன்னது…
    அடடா....இன்னும் எத்தனை பேர் கிளம்ப போறாங்க...

    நான் தான் ரஹ்மானுக்கு துணி தைச்சு குடுத்தேன்...ரஹ்மான் சாப்பிடுற அரிசி எங்க வயல்ல தன் விளயுதுன்னு....

    நம்ம மக்கள் என்னைக்கு தான் திருந்துவாங்களோ.....யப்பா....இப்போவே கண்ணைக் கட்டுதே
    **************
    ரிப்பிட்டோய்ய்ய்ய்ய்ய்ய்

    ReplyDelete